ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், 83 மையங்களில் 25,456 மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 202 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 161 பேரும் புதன்கிழமை நடைபெற்ற தேர்வில் பங்கேற்கவில்லை.

இதனால், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 15,916 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 9,177 பேரும் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் 83 தேர்வு மையங்களைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர்

ம. ரவிக்குமார் பார்வையிட்டு கூறுகையில்,  மாவட்டத்தில் தேர்வைக் கண்காணிக்க, 166 உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் தேர்வு எழுத அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

Courtesy : Dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply