பழையகாயலில் விவசாயியை கொலை செய்ய முயன்ற சுமை தூக்கும் தொழிலாளியை ஆத்தூர் போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர்.
பழையகாயல் அருகிலுள்ள கோவங்காடு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வேலுமணி(32).விவசாயி.கோவங்காடு தெற்கு தெரு ராஜா மகன் முத்துகிருஷ்ணன் என்ற மாரிக்கண்ணு (29).இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி.
இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.திங்கட்கிழமை இரவு பழையகாயல் பஜாரில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முத்தி முத்துகிருஷ்ணன் வேலுமணியை தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி உள்ளார்.இதில் வேலுமணிக்கு இடது பக்க விலாவில் காயம் ஏற்பட்டுள்ளது.அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பழையகாயலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவும் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து பழையகாயல் அன்னை பரிபூரணி மக்கள் மன்றத்தில் முப்பெரும் விழா நடத்தினர்.
சட்ட விழிப்புணர்வு முகாம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்ட உதவி மற்றும் ஆலோசனை மைய துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆலோசனைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜோ.பிரபுதாஸ் தலைமை வகித்தார்.மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான க.குருவையா மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சு.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான தி.ஜெயகுமாரி ஜெமிரத்னா, ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் து.செல்வம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சு.வேலுமயில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பழையகாயல் பங்குதந்தை பவுல் ராபின்ஸ்டன், புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் து.சேவியர் சகாயராஜ், பள்ளி நலக்குழுத் தலைவர் ந.விவேகானந்தன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ச.வே.ஜெயசங்கர், விவசாய சங்கத் தலைவர் ச.கண்ணன், வழக்கறிஞர்கள் அ.சங்கரபாண்டியன், சு.அருள்பாண்டியன் மற்றும் செ.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் லெ.கலா லெட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.இறுதியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தி.ஜெயகுமார் ஜெமிரத்னா நன்றி கூறினார்.