குரும்பூர் அருகே உள்ள புறையூர் புனித இஞ்ஞாசியார் ஆலய
பெருவிழா மற்றும் தூய அந்தோனியார் கெபியின் 25ம் ஆண்டு விழா ஆகிய இருபெரும்
விழா நடந்தது.
20ம் தேதி கொடியேற்றம், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. 28ம் தேதி இரவு
ஜெபமாலை, புதிய கெபி அர்ச்சரிப்பு, மாலை ஆராதனை, நற்கருணை பவனி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட முதன்மைகுரு ஆண்ட்ரூ டி ரோஸ் தலைமை வகித்தார்.
சென்னை அல்போன்ஸ் மாணிக்கம் மறையுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து
புனிதரின் திருஉருவ பவனி நடந்தது. 29ம் தேதி திருவிழா சிறப்பு கூட்டுத்
திருப்பலி நடந்தது. மணவை வட்டார முதன்மைக் குரு செல்வராசு தலைமை வகித்தார்.
தூத்துக்குடி சேசு சபை தியாகு மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து திருவுருவ
பவனியும், மாலை நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது.
வனத்திருப்பதி கோயிலில் மூன்றாவது ஆண்டு வருஷாபிஷேக விழா வரும்
6ம் தேதி நடக்கிறது.வனத்திருப்பதி புன்னை நகர் ஸ்ரீநிவாச பெருமாள்,
ஆதிநாராயணன்-சிவனணைந்த பெருமாள் கோயிலின் மூன்றாவது வருஷாபிஷேக விழா வரும்
6ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு
சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10.30
மணிக்குள் வருஷாபிஷேக விழாவும் ஜலச அபிஷேகமும் நடக்கிறது.
மாலை 4.30
மாலை 4.30
மணிக்குஊஞ்சல் சேவையும், மாலை 6 மணிக்கு புதிய படிச்சட்டத்தில் நவசக்தி
விநாயகரும், புதிய கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாளும், புதிய
அன்னபட்சி வாகனத்தில் புன்னை ராஜகோபால் சுவாமியும், புதிய யானை வாகனத்தில்
திருத்தணி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும், மதியம்
படிச்சட்டத்தில் வடபழனி ஆண்டவர், வாரியார் சுவாமிகளுடன் நாக கன்னியம்மன்
வாகனங்களில் ஆறு உற்சவ மூர்த்திகள் மேள தாளத்துடன் திருவீதி உலாவும்,மாலை
7.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை சிறப்பு வாணவேடிக்கையும், இரவு 8.15
மணிக்கு லஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சியும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
ஓட்டல் சரவணபவன் இனிப்பு பிரசாதமும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து
இரவு 12 மணிக்கு திருச்செந்தூர், ஆறுமுகநேரி, பூச்சிக்காடு, குரும்பூர்,
ஆத்தூர், ஏரல், சிவத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய
ஊர்களுக்கு இலவச வேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை
வனத்திருப்பதி நிறுவனர், நிர்வாக கைங்கர்யதாரர் ராஜகோபால் செய்து
வருகிறார்.
ஏரலருகே உள்ள ராஜபதி சிவன் கோயில் நவ கைலாசங்களுள் ஒன்று.இக்கோ யிலில் கர்த்திகைத்திங்கள் சோமவாரத்திருவிழா வெகுச்சிற்ப்பாக நடந்தது.கைலாசநாதருக்கு 108 சங்கு அபிசேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குரும்பூர் ரயில்நிலையம் சமீபம் தண்டவாளத்தின் அருகில் கட்டித் தொழிலாளி கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மனைவி மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்து விசார ணை செய்து வருகின்றனர்.
குரும்பூர் அருகிலுள்ள வீரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் பாலையா நாடார் மகன் ராமர்(40).கட்டிடத் தொழிலாளி.இவரது மனைவி சுந்தரி(35).இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ராமர் தனது குடும்பத்தினருடன் முத்தையாபுரத்தில் தங்கி தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராமர் குரும்பூர் ரயில் நிலையம் சமீபம் தண்டவாளம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.அருகில் ரத்தக் காயத்துடன் பாறாங்கல், மதுபாட்டில், தம்ப்ளர்கள் மற்றும் தேங்காய் முதலியன கிடந்தன.
சம்பவ இடத்தினை ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், ஆய்வாளர் பட்டாணி, உதவி ஆய்வாளர்கள் கதிரேசன் மற்றும் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் போலீஸார் முத்தையாபுரம் விரைந்து ராமர் வீட்டிலிருந்த அவரது மனைவி சுந்தரி மற்றும் ராமர் உறவினரான குரும்பூர் அருகிலுள்ள திருமலர்புரத்தைச் சேர்ந்த முத்து பெரியசாமியையும்(38) கைது செய்தனர்.
கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:முத்து பெரியசாமியின் மனைவி ஒரு வருடத்திற்கு பின் இறந்துவிட்டார்.அதன் பின்னர் முத்து பெரியசாமி ராமருடன் முத்தையாபுரத்தில் அவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தாராம்.இந்நிலையில் சுந்தரிக்கும் முத்து பெரியசாமிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகவும் அதனை அறிந்து ஊருக்கு வந்து புகார் செய்ய ஞாயிற்றுக்கிழமை ராமர் ஊர் வந்த போது அதை அறிந்து வந்த முத்து பெரியசாமி, ராமரை சமாதானப்படுத்தி அவருக்கு மது வாங்கி கொடுத்து ரயில்வே தணன்டவாளம் அருகில் பாறாங்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
குரும்பூர் அருகில் குரங்கன் தட்டு கிராமத்தில் தீவிபத்தில் வீடிழந்தவர்களு க்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரி உள்ளது.இது தொடர்பாக அதன் மாவட்ட தலைவர் ராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த வியாழக்கிழமை குரும்பூர் அருகிலுள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் திடீரென இரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 வீடுகள் எரிந்து சாம்பலாகின.இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளே குடியிருந்து வந்தனர்.
தீவிபத்திற்கு பின் அவர்கள் திறந்த வெளியில் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.அவர்களுக்கு நிவாரணத்தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.அவர்களு
க்கு தீப் பிடிக்காத வீடுகள் தமிழக அரசு சார்பில் கட்டிக் கொடுக்க வேண்டும்.மேலும் துணிமணிகள் மற்றும் பாத்திரங்களின்றி அவர்கள் அவதிப் படுகின்றனர்.
அவர்களுக்கு அடிப்படையாக தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டுமென அவர் கோரி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் ராமையா, தாலுகா தலைவர் நடேச ஆதித்தன், தாலுகா செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
குரும்பூர் அருகில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மகாசேமம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
குரும்பூர் அருகில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாசேமம் அறக்கட்டளை சார்பில் திங்கட்கிழமை உதவி வழங்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று குரும்பூர் அருகில் குரங்கன்தட்டு கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின.இதில் பாதிக்கப் பட்ட 45 குடும்பத்தினை சேர்ந்த 250 உறுப்பினர்களுக்கு மகாசெம அறக்கட்டளை சார்பில் திங்கட்கிழமை உணவு மற்றும் அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தூத்துக்குடி மண்டல மேலாளர் பாஸ்கர சேதுபதி, வட்டார மேலாளர் சுரேஷ் மற்றும் கிளை மேலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் குரங்கன்தட்டு கிராமத்தில் வியாழக் கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 46 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.தீயணைப்பு வண்டி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரும்பூர் அருகில் நல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தது குரங்கன்தட்டு கிராமம். இக் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.அனைவரும் விவசாய கூலித் தொழிலாளிகள்.வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இங்குள்ள பழைய தெருவில் பெரியசாமி என்பவரது வீட்டில் அவரது மனைவி முனியம்மாள்(45) குத்து விளக்கேற்றி வைத்து விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம்.திடீரென வீசிய சூறைக்காற்றால் விளக்கு தீபரவி குடிசையில் தீ பிடித்து.அருகில் உள்ள வீரபாண்டி குடிசைக்கு தீபரவி அங்குள்ள சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பரவியது.இச்சப்தம் கேட்டு குடிசைகளிலிருந்து மக்கள் வீட்டில் உடமைகள் அப்படியே போட்டு விட்டு குழந்தைகளுடன் வெளியேறினர்.இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.காற்றினால் தீ மள மளவென பரவியதால் தீவிபத்தில் 46 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டன.சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டு சூழ்ந்நததால் மீட்பு பணி தாமதம் ஆகியது.குடிசைகளில் எந்தவித பொருட்களும் தப்பவில்லை.அனைத்தும் சாம்பலாகி விட்டன.
தகவலளித்தும் தீயணைப்பு வண்டிகள் வராததினார் குரும்பூர்-திருச்செந்தூர் சாலையில் கிராம மக்கள் சுமார் 150 பேர் மரத்தை அறுத்து குறுக்கே போட்டுமறியலில் ஈடுபட்டனர்.ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், குரும்பூர் ஆய்வாளர் பட்டாணி மற்றும் உதவி ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து கிராம மக்களை சமாதனப்படுத்தி சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.சுமார் 30 நிமிடம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப் பட்டது.மாற்று வழியில் பேரூந்து இயக்கப்பட்டது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தி லிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தனர்.
திருச்செந்தூர் தாசில்தார் வீராசாமி, ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற தலைவர் சா.பொன்ராஜ் மற்றும் திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் கோபால் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.