அதிமுக 42-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி காயல்பட்டினம் நகரக் கிளை சார்பில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைச் செயலர் ஷேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். நகரச் செயலர் செய்யது காசிம் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் வாழ்த்திப் பேசினார்.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நகர இணைச் செயலர் அருணாசலக்கனி, பொருளாளர் ஜின்னா, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Courtesy: Dinamani
புரட்டாசி கடைசி சனி ஆறுமுகனேரி, காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காயல்பட்டிணத்திலுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில் ராகு கேதுகளுக்கானப் பரிகாரத் தலமாக விளங்குவதால் இக்கோயில் தற்போது பிரபலமடைந்ந்து வருகின்றது.இத்தகைய
காயல்பட்டினம் ரத்னாபுரி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீஅழகியமணவாளபெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடுநடைபெற்றது. மேலும் புரட்டாசி கடைசிசனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும்அம்மனை தரிசனம் செய்தனர்.
காயல்பட்டினத்தில் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடைபெற்ற கேரம் போட்டியில் காவாலங்கா அணி வெற்றி பெற்றது.
÷இப்போட்டியில் 48 ஆட்டக்காரர்களைக் கொண்ட மொத்தம் 24 அணிகள் விளையாடின. பின்னர் நடைபெற்ற லீக் போட்டியில், எம்.என்.முஹம்மத் அலீ - சபீர் ஆகியோரைக் கொண்ட காவாலங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரெட் ஸ்டார் சங்க அணி இரண்டாமிடத்தையும், மன்பவுல் பரக்காத் சங்க அணி மூன்றாமிடத்தையும், ஹாஜியப்பா அணி நான்காமிடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு காயல்பட்டினம் காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா சங்கத்தைச் சேர்ந்த வேனா முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். எஸ்.எம். முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ பரிசுகளை வழங்கினார். எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் மீரா ஸôஹிபுக்கு வளரும் இளம் நட்சத்திர வீரருக்கான சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நவ்ஃபல், சொளுக்கு முஹம்மத் தம்பி, எம்.பி.எஸ். இஸ்மயில், மன்பவுல் பரக்காத் சங்கத்தைச் சேர்ந்த முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாணவியர் பேரவை தேர்தலில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவியர் பேரவை தேர்தலில் கல்லூரியின் அனைத்துத் துறை சார்ந்த மாணவியர் பலர் போட்டியிட்டனர். கல்லூரியின் மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவி எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஸீன் பேரவைத் தலைவராகவும், பொருளியல் துறை இரண்டாமாண்டு மாணவி எம்.முருகேஸ்வரி துணைத் தலைவராகவும், ஆங்கிலத் துறை இரண்டாமாண்டு மாணவி டி.கீர்த்திகா செயலராகவும், அத்துறையின் முதலாமாண்டு மாணவி என்.ஃபஜீலா துணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், பேரவை மன்றத் துவக்க நாள் முதல் இரண்டாண்டுகளுக்கு இப்பொறுப்பில் செயல்படுவர். வெற்றிபெற்ற மாணவியர் பேரவை நிர்வாகிகளை கல்லூரியின் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் வாழ்த்தினர். ஏற்பாடுகளை, கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவியும், மாணவியர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஜெ.ஷர்மின் மேரி ஜானகி செய்திருந்தார்.

காயல்பட்டினத்தில் காந்தி மக்கள் கட்சி சார்பில் 4 ஆம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ஏ.ஜெயமுருகன் தலைமை வகிக்கிறார். கட்சி நிறுவனத் தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கர் மற்றும் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதாக மாவட்டச் செயலர் கே.அலாய்வாஸ் தெரிவித்தார்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் புனித ரமலான் நோன்பு குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எம்.ஆர். நபிஷத் தாஹிரா கிராஅத் ஒதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பத் துறை மூன்றாமாண்டு மாணவி கே. ஆயிஷா சமீனா ரமழான் கவிதை வாசித்தார். மகளிர் அரபுக் கல்லூரி பேராசிரியை எம்.ஐ.கதிஜத்துல் குப்ரா ஆலிமா மு அஸ்க்கரியா சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவனத் தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான், அவரது துணைவியார் ஞானி வஜீஹா பேகம், வாவு எஸ்.ஏ.ஆர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாக இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி, தமிழ்த் துறைத் தலைவி இரா. அருணா ஜோதி மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரபுத் துறைத் தலைவி பேராசிரியை எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் பாத்திமா செய்திருந்தார். கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எஸ். ஹவ்வா நஜாஹா நவ்ஷீன் வரவேற்புரையாற்றினார் வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி என்.எஸ். செய்யது நபிஷா நன்றி கூறினார்.

காயல்பட்டினத்தில் மனமே மருந்து என்ற தலைப்பில் மகளிருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தொழிலதிபர் ஷேக், க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில், சென்னையைச் சேர்ந்த குடும்ப நல ஆலோசகர் ஏ.நஃபீஸ் அஹ்மத் கருத்துரை வழங்கினார். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், காயல்பட்டினம் பெண்கள் நலச் சங்கம் என்ற பெயரில் மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆறுமுகநேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி செயற்குழு உறுப்பினர் அமீன் தலைமை வகித்தார். செயற்குழு
உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பாண்டியராஜன்
வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜாமணி, நகர் நல மன்ற தலைவர்
பூபால்ராஜன், அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு
பேச்சுப்போட்டி நடந்தது. எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
ஆசிரியர் கண்ணன், ஆசிரியை வெள்ளையம்மாள் ஆகியோர் பேசினர்.
காயல்பட்டணத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டணத்திற்கும், ஆறுமுகநேரிக்கும் இடையே ரத்னாபுரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு அழகிய மணவாளப் பெருமாள் கோயில் சிற்பக் கலை நயத்துடன் அமைந்துள்ளது. பாண்டியர் காலம் விஜயநகர காலம் என்று இருவேறுபட்ட காலங்களிலும் திருப்பணிகள் நடந்துள்ளது.கடற்கரைக் காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் கட்டடங்களும் சிற்பங்களும் பொறிந்து சிதைந்துள்ளன. நீண்ட நாளாக வழிபாடின்றி இருந்து இக்கோயில் திருப்பணிகளுக்குப் பின்பு பொலிவு பெற்றுள்ளது. திருப்பணியும் உழவாரப் பணிகளும் நடந்த போது சிதைவுற்ற நிலையில் 3 கல்வெட்டுக்கள் புதியதாகக் கண்டறியப்பட்டன. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த புதுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், தொல்லியல் ஆராய்ச்சியாளருமான தவசிமுத்து கூறியதாவது, அழகிய மணவாளப் பெருமாள் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப் பெற்று விஜயநகரக் காலத்தில் பல்வேறு திருப்பணிகளைப் பெற்றுள்ளது. கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள உற்சவ கல்மேடைக்கு மேலேயுள்ள சுவரில் 11 வரிகளில் பிற்காலப் பாண்டியர்கால எழுத்தமைதியுடன் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு பொறிந்துள்ளதால் தொடர்ச்சியாக அதனுடைய பொருளை அறிய இயலவில்லை. இருப்பினும் பல செய்திகள் பொதிந்துள்ளன. குட நாட்டு உதைய மார்த்தாண்டன்பட்டினத்து நயினார் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலுக்குத் திருவிளக்கு ஏற்றிடவும், தினசரி வழிபாட்டிற்கு நைவேத்தியம் செய்வதற்கு அரிசி மற்றும் பொருட்கள் வழங்கிட வீர வளநாட்டில் வயல், தோட்டம் மற்றும் குளமும் மதுரை நம்பி என்பவருக்கு வழங்கப்பட்ட தகவல் உள்ளது.
இக்கல்வெட்டில் தற்போது காயல்பட்டணம் என்றழைக்கப்படும் ஊர் உதைய மார்த்தாண்டன்பட்டினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1383 ஆம் ஆண்டினது சேர மன்னனான உதைய மார்த்தாண்டனின் கல்வெட்டுப் பலகையொன்று வீரபாண்டியன்பட்டினத்திற்கும், காயல்பட்டிணத்திற்கம் இடையேயுள்ள காட்டு மொகுதூம் பள்ளி வாசல் அருகே உள்ளது. அதில் அங்கிருந்த பள்ளியொன்றை உதைய மார்த்தாண்டன் பெரும்பள்ளி என்று கூறுகிறது. தற்போது அழகிய மணவான பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு மேற்கண்ட அரசனுடைய பெயரில் அமைந்துள்ளது. என வே இக்கல்வெட்டும் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருத இயலும். மேலும் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலின் மகாமண்டபத்தில் வெளிப்புறம் தெற்குச் சுவற்றில் புதையல் குறித்த கல்வெட்டொன்றும் கண்டறியப்பட்டுள்ளது. தனந்தோன்ற வைத்துப் புதைத்திருந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது.மேலும் சுவற்றின் அடிப்பகுதியில் ஜெகதி என்றழைக்கப்படும் இடத்தில் இராசன் என்ற சொல் காணப்படுகிறது. மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களும் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்ததாகும். காயல்பட்டணம் சங்க காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியுள்ளது. கொற்கையுடன் இø ணந்து செயல்பட்டுள்ளது. தற்பொழுதும் காயல்பட்டணப் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான ஓடுகள், பீங்கான், முதுமக்கள் தாழிகள், அயல்நாட்டு காசுகளெல்லாம் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. கொற்கை முத்து, வலம்புரிச்சங்கு, பஞ்சு, இரும்பு ஆயுதங்கள் ஏற்றுமதியாயின. வைணவக் கோயில்களில் நடைபெறும் அø னத்து திருவிழாக்களும் இ ங்கே நடந்துள்ளது.இவ்வாறு தவசிமுத்து தெரிவித்துள்ளார்.
காயல்பட்டணம்: காயல்பட்டணம் பகுதியில் கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கர்களை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையிலான போலீசார் அதிரடியாக அகற்றினர்.
தனியார் சொகுசுகார்கள் மற்றும் வாடகை கார், வேன் போன்ற வாகனங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் வெப்பத்தைத் தவிர்த்திட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது வாடிக்கையாகும். இந்த கருப்பு ஸ்டிக்கர்களால் கார், வேன் போன்ற வாகனங்களுக்குள் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை.
இதனை தவிர்க்கும் நோக்கத்தில் கார் உட்பட்ட வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கார், வேன் உட்பட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர். கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதில் சிலர் தாங்களாகவே முன்வந்து கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் போலீசார் காயல்பட்டிணம் பைபாஸ் ரோடு, ஆறுமுகநேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றினர். இந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மை பெண்கள் பிரிவு நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துளிர் அரங்கத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 118 ஏழை முஸ்லீம் பெண்களுக்கு 7 லட்சத்து18 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசுதினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவிலான
கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று மானில அளவிலானப் போட்டிக்கு எல்.கே.மேல்நிலைப்பள்ளி தேர்வு பெற்றுள்ளது.
கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று மானில அளவிலானப் போட்டிக்கு எல்.கே.மேல்நிலைப்பள்ளி தேர்வு பெற்றுள்ளது.
காயல்பட்டினம் நகரசபையில் உள்ள அருணாசலபுரம்,கொம்புத்துறை,
சிங்கித்துறை,மாட்டுக்குளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்
மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மேலும் மழையால் மூன்று வீடுகள்
இடிந்து விழுந்தது.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்
பார்வையிட்டு உடனே தண்ணீர் வடிந்து செல்ல உரிய நடவடிக்கை
எடுத்தார். நகரசபைத் தலைவி ஆபீதா நகரசபைக்கான அடிப்படையான
தேவைகள் குறித்த வேண்டுகோள்களை வைத்தார்.
திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான அகல ரயில் பாதையில் திருச்செந்தூரை அடுத்து காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆறுமுகநேரி டூ காயல்பட்டணம் இடையேயான மெயின் ரோட்டில் ; காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் தண்டவாளங்களுக்கு இடையே மற்றும் வெளிப்பகுதியில் பிளேட் போன்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவைகள் முறையாகவும்ää சரியாகவும் பதிக்கப்படாமல் உள்ளது. மேலும் பதிக்கப்பட்டுள்ள பிளேட்டுகள் வெளியே தெரியாத வகையில் தார் போட்டு பூசியிருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடத்தில் சரல் போட்டு நிரப்பப்பட்டிருந்தது. இதில் அடிக்கடி விபத்து நடந்ததால் தார் போட்டு சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காகவே பிளேட் போடடனர். ஆனால் பிளேட் போட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் தார் போடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிது. மெயின்ரோடு இணையும் இடத்தில் தரமானதாக குண்டும் குழியும் இன்றி இருந்தால் தான் ரோட்டில் வரும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் எளிதாக தண்டவாள பகுதியில் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் குண்டும் குழியுமாக இருப்பதால் பலர் இதில் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. குறிப்பாக பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் தினமும் விழுந்து காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் ஏற்படும் முன் தார் போட்டு சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயல்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினரும், சிறப்புரையாற்றியவர்களும்.
காயல்பட்டினர் பஜாரில் வெள்ளிக்கிழமை மதியம் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் உள்ள தஃவா சென்டருக்குள் ஆறுமுகனேரி காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி இரவு அனுமதியின்றி நுழைந்து அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து காயல்பட்டினத்தில் ஜும்மா தொழுகைக்கு பிறகு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தஃவா மையத்தின் தலைவர் எம்.ஏ.புஹாரி, நிர்வாகி ஜக்கரிய்யா, நவாஸ் அஹமத், கலாமி அபுல்ஹஸன், அல்தாஃப், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹூஸைன் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நியாஸ் உள்பட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட நேரத்தில் திருச்செந்தூர்-தூத்துக்குடிக்கிடையிலான போக்குவரத்துஅடைக்கலாபுரம் வழியாக திருப்பி விடப்பட்டது.
காயல்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் 18வது ஆண்டு இந்து எழுச்சி திருவிழா 3 தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இதனையொட்டி காயல்பட்டினம் ஸ்ரீகணபதீஸ்வரர் ஆலயத்தில் முதல் தினமான விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 9 அடி ஸ்ரீவெற்றி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலையில் 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இரண்டு மற்றும் மூன்றாம் நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மூன்றாம் நாள் மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் வெற்றி விநாயகர் விஜர்சனத்திற்கு புறப்பட்டார்.
ஊர்வலத்தை பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.என்.ராஜ கண்ணன் துவக்கி வைத்தார்.ஊர்வலம் ரத்னாபுரி வந்து ஆறுமுகனேரியிலிருந்த விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் சென்று சனிக்கிழமை இரவு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் இந்து முன்னணியினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காயல்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் புதன்கிழமை ரம்ஜானையொட்டி பள்ளிகள் மற்றும் கடற்கரையில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.நகர் விழாக் கோலம் பூண்டிருந்தது.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் செவ்வாய் கிழமை இரவு மக்ரிப் தொழுகைக்குப்பின் நகர அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமா அத் உலமாக்கள்(மார்க்க அறிஞர்கள்) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழகத்தில் பரவலாக பிறை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அதனை உறுதி செய்து 31ஆம் தேதி ரம்ஜான் நோன்பு பெருநாள் கொண்டாட அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் நகராக்கள் ஒலிக்கப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் ரம்ஜான் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை சார்பில் நடைபெற்ற கடற்கரை சிறப்பு தொழுகையை ஏ.எஸ் முஹம்மத் முஹ்யித்தீன் நடத்தினார்.
குத்பா பேரூரையை தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் மாநில பேச்சாளர் அப்துல் கபூர் மிஸ்பாஹி நிகழ்த்தினார்.
தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் கிளை தலைவர் சம்சுதீன், மாவட்ட துணை செயலாளர் முஹம்மத் மக்கீ, கிளை துணைத் தலைவர் சாலப்பா, செயலாளர் சலாஹூதீன், செயற்குழு உறுப்பினர் யாசின், நிர்வாகி ஹஸன், காஜா, மூசா, டாக்டர் அபுல் ஹஸன், தாஹா, கோஸ்முகம்மது, மரைக்கார், நெய்னா மரைக்கார், சம்சுதீன், அபூபக்கர், முஜிப், ஜிந்தா, உள்பட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்தில் குத்பா பெரிய பள்ளி, குத்பா சிறிய பள்ளி, தைக்கா சாகிபு பள்ளி, தாயிம்பள்ளி, கொடி மர சிறுநெய்னா பள்ளி, குருவித்துறை பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி, அஹ்மத் நெய்னா பள்ளி, இரட்டை குளத்துப்பள்ளி, புதுப்பள்ளி, கடைப்பள்ளி, அப்பா பள்ளி, காட்டுத் தைக்கா பள்ளி, ஆறாம் பள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் மற்றும் மகளிர் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகைகளிலும் குத்பா பேரூரைகளும் நடைபெற்றன.
பள்ளிகளில் தொழுகைகள் முடிவடைந்த பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
புத்தாடைகள் அணிந்து உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் இல்லங்கள் சென்றும் வாழ்த்துக்களை பரிமாறினர்.மாலையில் கடற்கரையில் கூடிய இஸ்லாமியர் கள் வெளியிடங்களிலிருந்து வந்திருந்த இஸ்லாமியர்களை சந்தித்து வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.
காயல்பட்டினம் கடற்கறையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி சார்பில் செவ்வாய்கிழமை ரம்ஜான் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் செவ்வாய்கிழமை காலை காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் தொழுகையை அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி இமாம் நெய்னா முகம்மது நடத்தி வைத்தார்.
பள்ளியின் கத்தீபு அப்துல் மஜீத் மஹ்ழரி குத்பா பேருரையை நிகழ்த்தினார்.
இச்சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் தலைவர் தஸ்தஹீர், செயலாளர் வழக்கறிஞர் மீரா சாகிப், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத் தலைவர்கள் அபுல் ஹஸன் கலாமி, அபூபக்கர், இப்னு சவூது, துணைச் செயலாளர் நவாஸ், துணைப் பொருளாளர் கியாது சேட், அன்னை கதீஜா மதரஸா நிர்வாகி மாஷா அல்லா செய்யது முகம்மது, கரூர் அசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்துல் வாஹித், தேமுதிக அகமது உசேன், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் உசேன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும் இஸ்லாமியர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.