ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » குலசை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா அக்.16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Image result for குலசை அறம் வளர்த்த நாயகி அம்மன்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா அக்.16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புராதன பெருமைகள் கொண்ட இத்திருக்கோயிலில் சூரிய பகவான் தம் இருதேவியருடன் எழுந்து எட்டு கிரகங்களுடன் அருள்பாலிக்கும் நூதன பீடம் அமைந்துள்ளது.
சனி பகவான் தம் தாய் தந்தையருடன் எழுந்து அருள்பாலிக்கும் அதிசய திருத்தலம். ஸ்ரீபதஞ்சலி முனிவர், பிருங்கி முனிவர், வாலி ஆகியோர் வழிபட்டு மேன்மை பெற்றது இத்தலத்தில்தான். காரைக்கால் அம்மையார் தம் அழகிய திருமேனி விலகி பேயுருவம்  பெற்றிட வழிபட்டு அருள்பெற்றது இத்தலத்தில்தான்.
இதுபோன்று பல்வேறு சிறப்புகள் பெற்ற, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த இத்தலத்தில் ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நிகழாண்டு அக்.16 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் அம்பாள் கேடயச் சப்பரத்தில் திருவீதியுலாவும், மாலையில் அப்பர் அடிகள் உழவாரப் பணி, ஆவாகனச் சீவிலி ரிஷப வாகனத்தில்  ஸ்ரீபெலிநாதர் திருவீதியுலா, பூங்கோயில், காமதேனு, ரிஷபம், சிங்கம், அன்னம், மின் அலங்கார சப்பரம், கிளி வாகனம், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.25ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அக்.26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணக் காப்பு கட்டுதல், அக்.27ஆம் தேதி காலையில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், மாலையில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெறும்.
திருக்கல்யாணம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் அக்.28 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தா.வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், மணியம் நெல்லையப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply