தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தசரா விழாவை முன்னிட்டு
மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள்
சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடினர்.
குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். தசரா விழாவில்
மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் காட்சியினை காண தமிழகம் முழுவதும்
இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தசரா திருவிழா அக்., 1 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் அன்று முதல் காப்பு
கட்டி விரதமிருந்தனர். பக்தர்கள் காளி, மாரி, கிருஷ்ணன், ராமர், அனுமன், நாரதர்,
பூதகனங்கள் போன்ற பல்வேறு மாறு வேடங்கள் அணிந்து பல இடங்களில் சாமியாட்டம்
நடத்தி அம்மனுக்கு காணிக்கை சேகரிப்பார்கள். இறுதி நாளான மகிஷாசூரன் வதம்
செய்யும் அம்மனை தரிசனம் செய்து தங்களது வேடங்களை களைவார்கள்.
அலை மோதிய கூட்டம்: நேற்று முன் தினம் மாலை முதல் ஆயிரக்கணக்கான காளி வேடம்
பூண்ட பக்தர்கள் அக்னி சட்டியுடன் சாமியாடி கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்
சூரனை வதம் செய்யும் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மாலையில் இருந்தே பக்தர்கள்
இடம் பிடித்து தங்கினர்.
சூரன் வதம்: நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின் 12 25 மணிக்கு
சூரன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து
அம்மன் கடற்கரையில் 12.35 க்கு வருகை தந்தார். மகிஷாசூரன் தன் சுய உருவத்துடன் வந்தவனின் தலையை அம்மனிடம் இருந்து புறப்பட்ட வேல் மூலம்
தலையை துண்டித்தனர். அதன் பின்பு சிங்கத்தலையுடன் வந்த சூரனை அம்மன் 12.39 க்கு
வேல் கொண்டு கொய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி
என்ற கோஷங்களை எழுப்பினர். அதன் பின்பு எருமைத்தலையுடன் வந்த சூரனை12.46
மணிக்கு அம்மன் வேல் புறப்பட்டு கொய்தது. அதன் பின்பு 12.53 க்கு சேவல் உருவத்தில்
வந்த சூரனை அம்மன் வேல் கொண்டு தலை கொய்யப்பட்டது. கடற்கரையில் இருந்த
சிதம்பரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் அதிகாலை 2 மணிக்கு எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு பின் திருத்தேரில் அம்மன் வலம் வந்து கோயில் வந்து சேர்ந்தார். காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா
நடந்தது. மாலை 5 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தார்.
மாலை 6மணிக்கு காப்பு களைதல் நடந்தது. அத்துடன் பக்தர்கள் தங்கள் விரதத்தினை நிறைவு செய்தனர். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12 ம் நாள்: காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,ஆராதனைகள் நடக்கிறது.
மதியம் 12 ம் மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது
0 comments