திருச்செந்தூர் யூனியன் நல்லூர் கிராம பஞ்.,ல் தமிழக அரசின்
இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு
பஞ்.,தலைவர் பரிசமுத்து தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய
அதிமுக.,செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.,இளைஞர் அணி செயலாளர்
லிங்ககுமார், தொகுதி இணை செயலாளர் ராஜாநேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 620 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை
திருச்செந்தூர் யூனியன் தலைவர் ஹேமலதாலிங்ககுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பஞ்.,துணை தலைவர் வேல்குமார், கவுன்சிலர்கள் கந்தையா,
மாரியப்பன், கண்ணன், மந்திரம், எழுத்தர் சுடலைமுத்து மற்றும் அருணாசலம்,
சுடலைமுத்து, இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments