ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் 20வது ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இதைமுன்னிட்டு 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த வீரவிநாயகர் சிலை மெயின் பஜாரில் உள்ள செந்தில் விநாயகர் கோயிலில் கொலு அமர்த்தப்பட்டுள்ளது.
இதே போன்று பாரதிநகர் வடக்கு பகுதியில் 7 அடி உயர விநாயகர் சிலையும், பாரதிநகர்மத்தி, முத்துகிருஷ்ணாபுரம், ராஜமன்னியபுரம், மடத்துவிளை, கமலாநேரு காலனி. கீழநவலடிவிளை, மூலக்கரை, காயல்பபட்டணம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு, ஓடக்கரை, மன்னராஜாகோயில் தெரு ஆகிய இடங்களில் 5 அடி உயர விநாயகர் சிலையும், வடக்கு சுப்பிரமணியபுரம், பாரதிநகர் மேற்கு, பாரதிநகர் தெற்கு, சீனந்தோப்பு, பூவரசு10ர், மேலதெரு, லெட்சுமிஅம்மன் கோயில் தெரு, இலங்கத்தம்மன் கோயில் தெரு, பெருமாள்புரம், சிவன்கோயில் தெரு, காணியாளர்தெரு, பத்ரகாளி அம்னம் கோயில், எஸ்எஸ்கோயில் தெரு ஆகிய இடங்களில் மூன்றரை அடி உயர விநாயகர் சிலைகளும் 31ம் தேதி பிரதிஷ்டை செய்தனர்.
மேலும் ஆறுமுகநேரியல் உள்ள முக்கியமான 25 அம்மன் கோயில்களில்; 2 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்று (2ம் தேதி) ஸ்ரீவீரவிநாயகர் அலங்கார ரதத்தில் புறப்பட்டு 25 அம்மன் கோயிலுக்கும் சென்று அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
நாளை (3ம் தேதி) காலை 25 அம்மன் கோயில்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்படும் இடமான செந்தில் விநாயகர் ஆலயம் வந்து சேர்கிறது. அதன்பிறகு செந்தில் விநாயகர் கோயிலில் சிறப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.
இதனைத் தொடர்து 108 விநாயகர் இந்து எழுச்சி பேரணி தொடக்க விழா நடக்கிறது. இதில் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளுடன், குரும்பூர், நாசரேத், பகுதிகளில் இருந்தும், ராணிமகராஜபுரம், காணியாளன்புதூர், சோனகன்விளை, மூலக்கரை, கூரந்தான்விளை, ஆத்தூர் பகுதியில் இருந்து வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், தலைவன்வடலி, தண்ணீர் பந்தல் ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் இணைகின்றன.
ஊர்வலத்திற்கு நகர இமு தலைவர் ராமசுவாமி தலைமை வகிக்கிறார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், நகர செயலாளர் கசமுத்து, செந்தில் விநாயகர் கோயில் நிர்வாகி திருமணி ஆகியோர் முன்னிலை வகிக்கினற்னர். தமிழக பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், இ.மு. மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மங்கலகுறிச்சி முத்துசுவாமி அடிகளர், மாணவி மாலிகாவர்ஷினி ஆகியோர் சிறப்புரையை தொடர்ந்து சிற்பி கணேசன் பேரணியை தொடங்கி வைக்கிறார்.
ஏற்பாடுகளை ஆறுமுகநேரி இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர்.


0 comments