ஸ்ரீவை., திருச்செந்தூர் தாலுகா அலுவலகங்களில்
ரேஷன்கார்டுகளில் உள்ள பெயர்களில் உள்ள குளறுபடியால் சான்றிதழ் வாங்க
முடியாமல் மாணவர்கள் அவதிபடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவை.,திருச்செந்தூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் தற்போது அரசு
உத்தரவின்படி மாணவ,மாணவிகள் 10ம் வகுப்பிலே சாதி, இருப்பிட, வருமான
சான்றிதழ் வாங்கி கொடுக்க வேண்டும். சில பள்ளிகளில் மொத்தமாக அவர்களே
விண்ணப்பங்களை நிரப்பி வாங்கி கொடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். அது தவிர
பல மாணவர்களின் பெற்றோர்கள் நிரந்தர சாதிசான்று, இருப்பிட சான்று, வருமான
சான்று ஆகியவைகளை அவர்களே விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். பல ரேஷன்
கார்டுகளில் மாணவர்களின் பெயர்களில் குளறுபடி மற்றும் சில பெயர்களில்
மாறுதல் ஆகியன உள்ளது. பல ரேஷன் கார்டுகளில் புனைப்பெயர் உள்ளது. மேலும்
இந்த மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ்களில் உள்ள பெயர்
மாறுதலாக ரேஷன் கார்டில் உள்ளது. இதனை பெற்றோர்கள் சிலர் கவனத்தில்
கொள்ளாமல் இருந்து விட்டனர். ஆனால் தற்போது சான்றிதழ் எடுக்க வரும்போதுதான்
இதுபோன்ற குழப்பங்களால் பல விண்ணப்பங்களை வி.ஏ.ஓ, வருவாய் அலுவலர் ஆகியோர்
திரும்ப அனுப்பி விட்டனர்.
விதிமுறைகள் படி சான்று விண்ணப்பம் மனுதார்
விதிமுறைகள் படி சான்று விண்ணப்பம் மனுதார்
வாக்குமூலம், கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை, ரேஷன் கார்டு நகல்,
பள்ளிச்சான்று நகல், பிறப்பு சான்று நகல் ஆகியன இணைத்து வைக்க வேண்டும்.
பிறப்பு சான்று, பள்ளி சான்று, ரேஷன் கார்டு ஆகிய அனைத்திலும் சான்று
வேண்டுவோரின் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக சான்று
வேண்டுவோரின் பெயர் மாடசாமி சொர்ணம் என்றால் தவறுதலாக ரேஷன் கார்டில்
சொர்ணம் மாடசாமி என்று உள்ளது. இதனால் இரண்டு பெயர்களும் ஒரே நபருடையது
என்பதில் குழப்பம் ஏற்படுவதால் பயனாளிகளுக்கு சான்று பெறுவதில் சிக்கல்
ஏற்படுகிறது. வீடுகளுக்கு கணக்கு எடுக்கும் பணியில் உள்ளவர்கள் கேட்கும்
போது வீட்டில் உள்ள பெண்கள் சொல் வழக்கில் கூப்பிடும் பெயரை கொடுப்பதால்
இந்த பெயரே ரேஷன் கார்டில் பதிவு ஆகி விட்டது.
மேலும் ஆழ்வை பகுதியில்
மேலும் ஆழ்வை பகுதியில்
இஸ்லாமிய மக்களின் கார்டுகளில் பல இடங்களில் பெயர் குழப்பம் காரணமாக ரேஷன்
கார்டில் பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டள்ளது. இதனால் அதிகமான நபர்கள்
சான்றிதழ் பெறுவதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்ட்டுள்ள மாணவர்கள்
ஸ்ரீவை., திருச்செந்தூர் தாலுகா அலுவகங்களில் சென்று விசாரித்த போது பெயரை
திருத்தக்கோரி விண்ணப்பித்தபோது தற்போது தரமுடியாது எனக்கூகூறிவிட்டனர்.
மேலும் அதற்கான 2008ம் ஆண்டு அரசு ஆணை காகிதத்தை கொடுத்தனுப்பி விட்டனர்.
தவறுகள் நிகழ்வது இயற்கை அதனை சரி செய்து அரசு வழங்க வேண்டும். சில
மாதங்களுக்கு முன்பு பலர் இதுபோன்று இரண்டு பெயரும் ஒன்று என சான்று
பெற்றுள்ளனர். அதே போல மாணவர்களின் படிப்பு விசயம் என்பதால் அரசு நிர்வாகம்
இதில் உடனடி கவனம் செலுத்தி உடனடியாக பயனாளிகளின் குறையை தீர்க்க
வேண்டும். இரண்டு தாலுகாக்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்களின் தொடர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலுபவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள்
இதனால் இவர்களின் தொடர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலுபவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள்
எடுத்து கோடிக்கணக்கில் பணம் செலவழித்து அவர்களின் கல்வி தொடர ஆவண செய்து
கொண்டிருக்கிறது. ஆனால் அரசு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளால் ஒரு
மாணவணின் படிப்பு பாதிக்கப்டுவது என்பது நடக்க கூடாத விஷயம் இதிலும்
ஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்பு பெயர் பிரச்னையில்
பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு துரித நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெயர் தவறுதலாக கொடுத்திருந்தாலோ, பதிவு
செய்திருந்தாலோ பிறப்பு சான்று, பள்ளி சான்று ஏதாவது ஒன்றை ஆதாரமாகக்
கொண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம் உடனடி செய்தால் இந்த மாணவர்கள்
சாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களை பெற்று படிப்பை தொடர
முடியும். இல்லையெனில் இவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி விடும் அவலநிலை
உள்ளது. வருவாய் துறை உடனடியாக இதில் நடவடிக்கை வேண்டும். பெற்றோர்கள்
பெயரை தவறாக கூறியதற்கும் அல்லது பதிவு செய்த அலுவலர்கள் தவறாக பதிவு
செய்ததற்கும் உள்ள பாதிப்பை தற்போது மாணவர்கள் அனுபவிக்கக்கூடிய நிலையில்
உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

0 comments