ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » குருநாதசாமிகோயில்திசைக்காவல்தெரு (குன்றுடையார்)


மூலவர்குருநாதசாமி
பரிவாரத்தெய்வங்கள்பெருமாள் சாமி குன்றுமலை சாஸ்தா மாசில்காரர் இலாடகுரு சன்னியாசி தெய்வ பெருமாள் கிழகத்தி முத்து பட்டாணி ஆதிகுருசாமி சிவனணைந்த பெருமாள் மும்மூர்த்தி கருப்பசாமி தூண்டில் மாடன் கட்டையாடும் பெருமாள் முன்னோடி முருகன் சுடலை மாடன் முண்டன் சங்கிலி மாடன் பிரம்மசக்தி அம்மன் இசக்கி அம்மன் சட்டிக்காரி பேச்சி அம்மன்.
நடைதிறப்புசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பு நாளன்றும் வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள்மாசி மாதம் - வருடாபிஷேகம் சித்திரை மாதம் - சித்ரகுப்தநாயனார் வழிபாடு ஆனி மாதம் - வருடாபிஷேகம் ஆடி மாதம் - கடைசி செவ்வாய் கிழமை கொடை விழா உட்பட ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
நிகழ்த்துக் கலைகள்முதல் மூன்று நாட்கள் வில்லுப்பாட்டும் நிறைவு நாள் கணியான் கூத்தும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது. பூக்குழி இறங்குதல் மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.
நேர்த்திக் கடன்கள்பூக்குழிக்கான கப்பிமுத்து விறகு உப்பு மற்றும் சாமிக்குரிய பட்டுகள் வேட்டி உடுப்புகள் கடையம் மோதிரம் வாள் வல்லயம் பொட்டுத்தாலி பூசைக்குாிய பொருட்களை வழங்குதல்.
பிறசெய்திகள்சாமிகடல் தீர்த்தத்திலும் ஆற்று தீர்த்தத்திலும் நீராடி வருவது சிறப்பியல்பாகும்.  மஞ்சள் பானை நீராடுதல் பூக்குழியுள் இறங்குவது நடைபெறுகிறது. நிறைவு நாளன்று பொங்கலிட்டு கிடா வெட்டி வழிபடுகின்றனர். குருநாதசாமிக்கு சைவ படையல் வைக்கப்படுகிறது. வேண்டும் வரம் தரும் வள்ளலாக உள்ளார்.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply