ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் சுவாமிக்கு அங்கி சாத்தும் முறை மீண்டும் அமல்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் இன்று திருச்செந்தூர் வந்தார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர், சண்முகர் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு மாதத்தில் 5முறை தங்கஅங்கி, வெள்ளி அங்கி, வைரவேல் சாத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களில் கட்டணத்தை செலுத்தி, தங்க-வெள்ளி அங்கி மற்றும் வைரவேல் சாத்தும் நடைமுறை கடந்த காலத்தில் இருந்துவந்தது.
 
ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் அந்த முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் சுவாமிக்கு தங்க மற்றும் வெள்ளி அங்கி, வைரவேல் சாத்தும் முறையை மீண்டும் அமல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
அதன்படி அந்த முறை இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. இனிவரும் நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் கூறினார்.
 
அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால், திருச்செந்தூர் கோவில் இணைஆணையர் சுதர்சன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

0 comments

Leave a Reply