க.தூசிமுத்து நாடார் பூவம்மாள் தம்பதிகளுக்குத் தவப்புதல்வராக 22.12.1915 இல் கோசல்ராம் பிறந்தார்.ஆறுமுகநேரியில் 5 வது வகுப்பு வரையும் சென்னையில் 10 ஆம் வகுப்பு வரையும் கல்வி பயின்றார். அனுபவக்கல்வியால் ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.
1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர்.
1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார்.
ஆலயப்பரவேசம் :தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்.
அமைப்பாளர் : உப்புத் தொழிலாளர் சங்கம் நாசரேத்தில் கூட்டுறவு நூற்பு ஆலை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்து வெற்றி கண்டார்.
மணிமுத்தாறு அணை கட்டுவதங்கு நிதி இல்லை கே.டி.கே. வசூலித்து தந்தால் திட்டம் என்று கைவிரித்த மராமத்து இலாகா அமைச்சர் திரு.பக்தவச்சலம் கூற்றைச் சவாலாக ஏற்றுக் கொண்டு ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்து சாதனை செய்தார்.
நான்குநேரி வட்டாரம் விஜயநாராயணத்தில் ராணுவ ஏவுகணைத் தளம். ராதாபுரம் வட்டாரம் பணகுடி - ராக்கெட் தளம்.
குமரி மாவட்டம் ”சின்ன முட்டம்” மீன் பிடிப்புத் துறைமுகத் திட்டம், அம்பை வட்டாரம் ”மணிமுத்தாறு நீர்த்தேக்கம்” ,பச்சையாறு அணைத் திட்டம், சிறு உப்புத் தொழிலாளர் சங்கம், இலங்கை அகதிகள் நல்வாழ்வுத் திட்டம், நாசரேத் நூற்பாலை, சேதுசமுத்திர திட்டம், தாரங்கதாரா இராசாயன தொழிற்சாலை, காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டம் ,கடலில் கலக்கும் குடிநீரை திசை திருப்பும் திட்டம், மின்சார திட்டம்
கரூர் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டம்
சென்னை - கன்னியாகுமாி கடலோரப் பகுதி சாலைத்திட்டம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சாத்தான்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருமுறை 1946-1952 1952-1957 மேலவை உறுப்பினராக 1957-1962 மதுரை-திருநெல்வேலி-ராமநாதபுரம்-கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக 1977 முதல் 6வது 7வது 8வது பாராளுமன்றத்தில் செயல்பட்டுள்ளார். 6வது நாடாளுமன்றக் கூட்டங்களில் 25.03.77 முதல் 20.08.79 வரை 9 கட்டக் கூட்டுத் தொடாில் 195 கேள்விகளை எழுப்பியுள்ளார் 67 முறை பேசியுள்ளார். அன்னை இந்திரா காந்தியால் “கோசல்ராம்ஜி“ என அன்புடன் அழைக்கப்பெற்றவர் “மணிமுத்தாறு தந்த மாவீரன் தென்னாட்டுச் சிங்கம்“ எனப் போற்றப்படுகிறார்.
0 comments