ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » ஏழு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் போக்குவரத்து துவக்கம்

நாமக்கல்லில் இருந்து, பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ள ஊர்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து திருப்பூர், திருவண்ணாமலை, திருச்செந்தூர், நாகூர் ஆகிய ஊர்களுக்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. அதனால், இப்பகுதியில் இருந்து, செல்பவர்கள் ஈரோடு சென்று திருப்பூருக்கும், சேலம் சென்று திருவண்ணாமலை, திருநள்ளாறுக்கும், திருச்சி சென்று நாகூருக்கும், கரூர் சென்று மதுரை வழியாக திருச்செந்தூருக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இப்பகுதிகளுக்கு நாமக்கல்லில் இருந்து நேரடி பஸ் போக்குவரத்து துவங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்து எம்.எல்.ஏ., பாஸ்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து, நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழித்தடத்தில் திருப்பூருக்கும், கரூர் வழித்தடத்தில் கோவைக்கும், சேலம், ராயவேலூர் வழித்தடத்தில் சென்னைக்கும், திருவண்ணாமலை, திண்டுக்கல்- மதுரை- தூத்துக்குடி வழித்தடத்தில் திருச்செந்தூருக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி வழித்தடத்தில் நாகூருக்கும், திருநள்ளாறுக்கும் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து துவங்க வேண்டும் என, எம்.எல்.ஏ., பாஸ்கர், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக முதல்வர், அனைத்து வழித்தடத்திலும், பஸ் போக்குவரத்தை துவக்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சென்னையில் நடந்த விழாவில், நாமக்கல்லில் இருந்து திருப்பூர், கோவை, சென்னை, திருவண்ணாமலை, திருநள்ளாறு, நாகூர், திருச்செந்தூர் ஆகிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். புதிய வழித்தடத்தில், நேரடி பஸ் போக்குவரத்து துவங்கியதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments

Leave a Reply