ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » பரமன்குறிச்சியில் ரோடு வசதி செய்துதர கோரிக்கை


தூத்துக்குடி:பரமன்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ரோடுகளை உடனடியாக
சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரமன்குறிச்சியில் 5 வது
வார்டு பகுதியைச் சேர்ந்தது எம்ஜிஆர் நகர். இங்குள்ள சாலைகள் சேதமடைந்து
நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் மிக மோசமாக உள்ளது. இந்த ரோட்டை
சீரமைக்கவேண்டும் என்று கடந்த கிராம சபை கூட்டத்தில் புகார் மனு மக்கள்
சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கவில்லை.தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழுதான ரோடுகளினால்
அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் வயதானவர்கள்,
பள்ளிமாணவ,மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக மோசமான ரோடுகளை
சீரமைக்கவேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply