சவுக்கைகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள் பிணக்குகள் இவற்றைத் தீர்த்துக் கொண்ட இடம் சவுக்கை எனப்பட்டது.
செவ்வகம் அல்லது சதுரவடிவிலான திண்ணை. அதன் நான்கு ஓரங்களிலும் தூண்கள் எழுப்பப்பட்டு அதில் மோட்டுக்கால் பரப்பிக் கூரை அல்லது ஓடு வேயப்பட்டு இருக்கும்.
இச்சவுக்கைகள் ஊரம்மன் கோயிலுடனோ அல்லது குடும்பக் குலதெய்வக் கோயிலுடனோ தொடர்புடையதாக உள்ளன. தெய்வத்தைச் சாட்சியாகக் கொண்டு வழக்குகள் பேசப்பட்டன. நீதி வழங்கப்பட்டது. அவசரக்கால அழைப்பென்றால் கோயில் மணி அடிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் நீதி மன்றங்களின் செயல்பாடுகள் அதிகரித்தப் பின்பு இச்சவுக்கைகள் கோயில் கொடைவிழா குறித்துப் பேசுவதங்காகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றன.
சவுக்கைகள்
1) மேலத்தெரு
2) நடுத்தெரு
3) இலட்சுமிமாநகரம்
4) பூவரசூர்
5) திசைக்காவல் தெரு
6) சுப்பிரமணியபுரம்
7) சீனந்தோப்பு
8) பேயன் விளை
9) காணியாளன் புதூர்
10) இராணிமகராஜபுரம்
11) வன்னிமாநகரம்
ஆகிய பகுதிகளில் கிராம நீதிமன்றமாக இருந்துள்ளன. பழமையான சிற்றூர்களில் இத்தகைய சவுக்கைகள் மரத்தின் அடியிலும் கோயில்களின் அருகிலும் அமைந்திருந்தன. கொற்கை துறைமுக நகரின் ஒரு பகுதியாக விளங்கிய ஆறுமுகநேரி பிற வளநாடுகளின் தலைமையிடமாகச் சங்ககாலத்தில் திகழ்ந்தது.
குளங்கள்
அந்நாளில் தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளை ஆறுமுகநேரி வழியாக ஓடி காயல்பட்டினம் கடலில் சென்று கலந்தது. இந்நாளில் அத்தகைய வளமிக்க பூமியில் இன்று குளஙகள் ஏராளமாக உள்ளன. நீர் பெருகுவதங்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நல்லூர் குளம் கடம்பாகுளம் ஸ்ரீவைகுண்டம் தென்கால் என வழிகள் பல விரிவாக உள்ளன. நீர் துள்ளிக்குதித்து தினமும் ஓடிவர வாய்ப்புகள் இல்லை. வடகாலில் வளம் கொழித்திட தென் காலின் கடைப்பகுதி நலிந்திட ஆறுமுகநேரி வானம் பார்த்திடும் நிலை மாறுதல் வேண்டும்.
ஆறுமுகநேரியில் காணப்பெறும் குளங்களின் (குளம்=ஏரி)
அடிப்படையில் இரண்டு வகைகளாக உள்ளன.
1) வழிபாட்டிற்கான குளம் (கோயில் சார்ந்த குளம்)
2) விவசாயத்திற்கான குளம்
1. கோயில் சார்ந்த குளம்
அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வர் (அழிந்துவிட்டது) தெப்பக்குளம் காமராஜர் பூங்காவில் உள்ளது. இத்தெப்பத்தில் நீராடி காவடி எடுத்துச் சென்றுள்ளனர்.
2. விவசாயம்
1. புதுக்குளம் என்ற பொய்யங்குளம்
2. பண்டாரங்குளம்
3. குதிரைக்குளம் என்ற குதிரைக்கான்குளம்
4. வடக்குத்தெரு குளம்
5. மேலத்தெரு தெப்பக்குளம்
6. சீனந்தோப்பு ஸ்ரீ பார்வதி அம்மன் கொயில் எதிரே தெப்பம்
7. நத்தக்குளம்
8. நாலாயிரமுடையார் குளம்
9. திருவக்குளம்
10. வண்ணான்குளம்
11. துலுக்கன்குளம்
முற்காலத்தில் இக்குளங்களின் பின்னணியில் வேளாண்மை செழித்திருந்தன என்பதை உணரலாம்.
வணிக நகரங்களின் எச்சங்களாக செக்குகள் இந்நாளில் காணப்படுகின்றன. ஆறுமுகநேரியின் மேற்குப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிதைந்த நிலையிலான பல கல்செக்குகள் காணப்படுகின்றன. இச்செக்குகள் மூலம் இவ்ஊரின் வணிகச்சிறப்பினை உணரலாம்.
இராணிமகாராஜபுரத்திலும் இத்தகைய பழமையான கல்செக்குகள் உள்ளன. பிற ஊர்களிலிருந்து எண்ணெய் வணிகத்தின் பொருட்டு மக்கள் எந்நேரமும் வந்து சென்றுள்ளனர்.
அரசு ஆரம்பச் சுகாதர நிலையம்
அறியாமை நோயை அகற்றுவதற்குக் கல்விக்கூடமும் மருத்துவ நோயைப் போக்குவதற்கு மருத்துவக் கூடமும் விளங்குகின்றன. தன்னலங்கருதாச் சேவையின் இலக்கணமாக மருத்துவர்கள் உள்ளனர்.
“நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்“
என்ற திருக்குறளுக்குச் சான்றாகத் திகழ்கின்றனர். ஊர்ப்பொதுமக்களால் 15.02.1956 இல் நிலம் வாங்கப்பட்டு அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. 12 படுக்கை வசதியுடன் 24 மணிநேரமும் பிரசவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. 3 மருத்துவர்கள் உட்பட 26 பணியாளர்கள் உள்ளனர்
Oxygen cylinder set, Suction apparatus, ECG machine. Foetal moniter A Examination set, LMC Fprceps, Outlet, Glucometer
ஆகிய உபகரணங்கள் உள்ளன.
திங்கள் - இதயநோய் நீர்ழ்வுநோய் சிகிச்சை
செவ்வாய் - கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை
புதன் - தடுப்பூசி குழந்தைகள் நலக்கல்வி சிகிச்சை
வியாழன் - பொது மருத்துவம் பள்ளிநலக்கல்வி சிகிச்சை
வெள்ளிக் கிழமை - கர்ப்பிணிகளுக்கு புற்றுநோய் கண்டறிதல்
சனிக் கிழமை - தோல் கண் காச நோய் எனச் சிகிச்சை வழங்கப்படுகிறது.
சராசரியாக ஒவ்வொரு மாதமும் 5000 புற நோயாளிகள். 20 உள் நோயாளிகள். 15 பிரசவங்கள் கவனிக்கப் படுகின்றன.
நூலகம்
“ஆறுமுகநேரியில் சுமார் 1890 ஆம் ஆண்டு சிவமத நாடார்களால் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட்டது. அதற்கு மேலவீடு பி.எஸ். அமிர்த லிங்கம் நாடார். தலைவர் நடுவீடு சுயம்புலிங்க நாடார் காரியதரசி. சீனந்தோப்பு ஐ.சிவசுப்பிரமணிய நாடார் பொருளாளர். இந்த சிவமத நாடார்களின் பிரதிநிதியாக பி.எஸ்.அமிர்தலிங்கம் நாடார் பெயரால் ஒருநிலமும் அதிலுள்ள கட்டமும் கிரையபத்திரம் மூலம் வாங்கப்பட்டது. சுமார் 12 ஆண்டுகள் நூலகமாகவும் படிப்பகமாகவும் செயல்பட்டு வந்த பின் அப்பணியை வேறு எவரும் ஏற்று நடத்த முடியாத நிலையில் அந்த நூலகத்திலிருந்த நூல்களும் அழிந்து போயின. இந்த நிலையில் ஆறுமுகநேரி சிவமத நாடார்களால் எஸ்.பொன்னையா நாடார் அவர்களை நிர்வாகியாக கொண்டு இயங்கிவந்த இந்து நடுநிலைப்பள்ளிக்கு அந்த நிலம் 1904இல் ஒப்படைக்கப்பட்டு நாளது வரை அப்பள்ளி நிலமாகவே இருந்து வருகிறது. இந்த நிலம் அப்பள்ளியின் வடபுறம் சுற்றுச்சுவர் வெளியில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது.
இதன் பின்னர் 1920 ஆம் ஆண்டு ஆறுமுகநேரி உப்பு இலாகா வட்டாரக் காரியாலத்தின் ஆய்வாளராக இருந்த திரு.ஜெகநாதஐயங்காரியின் முயற்சியால் உப்பள லைசன்சார் மற்றும் உப்பு வியாபாரிகளின் உதவியைக் கொண்டு ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. அந்த நூலகக் கட்டடம் ஆறுமுகநேரி ரெயில்வே நிலையம் வடமேற்கில் இருக்கிறது. உப்பு இலாகாவின் வட்டாரக் காரியாலயம் என்ற நிலைமை போய் ஆறுமுகநேரி சால்ட் பேக்டரி பிராஞ்ச் ஆபீஸ் என்ற நிலைமைக்கு மாறியவுடன் அந்த நூலகம் 1934 இற்குப் பின் செயல்படாமல் நின்று போய்விட்டது.
தேச விடுதலைக்குப் பின்பு ஆறுமுகநேரி மேல்தெருவில் கஸ்தூரிபா - வாசகசாலை என்ற பெயரால் மேலவீடு எஸ்.ஆர்.ராம்பால்சிங் பி.ஏ. தலமையில் நடுவீடு தியாகி மகாலிங்க நாடாரைக் கொண்டு நாலைந்து வருட காலம் வரை இயங்கிவந்த படிப்பகமும் பின்னர் கைவிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் லட்சுமிமாநகரம் நடுத்தெருவில் காமராஜ் பெயரால் இயங்கி வந்த ஒரு படிப்பகமும் நாளா வட்டத்தில் நின்று போயிற்று. எம்.எஸ். செல்வராஜன் தலைமையில் ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் யூனியன் சார்பில் காந்தித் தெருவில் தெ.ஆறுமுகநாடார் தலைமையில் இயங்கி வந்த பாரதி வாசகசாலையும் பலர் பயன்பட வழிவகுத்தது. திருவள்ளுவர் நூலகம் சார்ந்த படிப்பகமும் பலருக்கு பயன்பட்டு வந்தது.“ என்று எஸ்.ஏ.இராமச்சந்திர டோகோ அவர்கள் அரசுப் பொது நூலகத்தின் (2007-2008) வெள்ளி விழா மலர் கட்டுரையில் கூறிஉள்ளார்.
இந்நாளில் ஏராளமான நூல்களுடன் அரசு நூலகம் விளங்கி வருகிறது.நூலகத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்கி புரவலராகலாம். அவர்களுடைய புகைப்படம் நூலகதில் வைக்கப்படும்.நூலகரைத் தொடர்பு கொள்ளலாம்
டி சி டபுள் யூ லிட் சாகுபுரம்
ஆறுமுகனேரி மக்களால் இப்பகுதி தொழில் வளம் பெற்றிட நிலம் கொடுத்துத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தலை சிறந்து விளங்குகிறது.சுதந்திரப் போராட்டத் தியாகியும் மத்திய அரசால் பத்மபூசன் விருதும் பெற்ற சாகுசிரியான்ஸ்பிரசாத் ஜெயின் அவர்களுடைய தீர்க்கத்தரிசனத்தால் 1957 இல் அமைந்த இந்நிறுவனம் ஆசியாவில் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.காஸ்டிக் சோடா இல்மனைட் டிரை குளோரோ எத்திலீன் குளோரின் பிவிசி முதலியவற்றைத் தயாரித்து உலகமெங்கும் அனுப்புகிறது இந்நிறுவனம்.
இந்நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்கி வரும் கமலாவதி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி சாகுசிரியான்ஸ் பிரசாத் ஜெயின் அவர்களுடைய துணைவியார் கமலாவதி அம்மையாரின் நேரடிப் பார்வையில் உருவாக்கப் பெற்றதாகும். மற்றவருக்காக உழைத்திட சாகுபுரத்தில் அரிமா சங்கம் மற்றும் அரிவையர் சங்கம் இயங்கி வருகிறது. பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவர்களுடைய துணைவியர்கள் அரிமா சங்கத்தின் நற் சேவையைச் செய்து வருகின்றார்கள். ஆண்டுதோறும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். இந் நிறுவனத்தில் எந்நேரமும் ஆயத்த நிலையில் இருக்கும் தீயணைப்பு வாகனம் இப்பகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுகிறது.
ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் இலட்சுமி மாநகரம் கூட்டுறவு பண்டகசாலை - 01084.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆறுமுகநேரிப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு உண்டாயிற்று. முறையான உணவு வழங்குதல் இல்லாத நிலையை மாற்றிட கூட்டுறவுச் சங்கத்தை அமைத்திட வேண்டும் என்ற கூட்டுறவுச் சிந்தனையை விதைத்தவர் வடக்கு சுப்பிரமணியபுரம் டி.பொன்னையாஆவார். 26 உறுப்பினர்களுடன் 14.11.1946 இல் கூட்டுறவு துறையில் பதிவு செய்து 30.11.1946 இல் செயல்படத் தொடங்கியது.
இப்பண்டகசாலையின் தலைவர்களாக இருந்தவர்கள் டி.பொன்னையா நாடார் என்.ஏ.மாசானமுத்து நாடார் ஐ.ஜெயபாண்டியன் நாடார் ஆ.சோமசுந்தரம் நாடார் எல்.இராஜமணி நாடார் ஆகியோராவார்கள்.
தற்போது 2724 உறுப்பினர்கள் பங்குத்தொகை ரூபாய் 34001 உள்ளது. 35 பணியாளர்களுடன் இயங்கிவரும் ஏ.கே.எல்.நிறுவனத்திற்கு 23 நியாய விலைக்கடைகள் உள்ளன. ஆறுமுகநேரி-5 வீரபாண்டியபட்டணம்-2 ஆலந்தலை-1 மூலக்கரை-1 அம்மன்புரம்-1 மேலபுதுக்குடி வீரமாணிக்கம்-1 பள்ளிபத்து-1 ாகனம்-1 வள்ளிவிளை பூச்சிக்காடு-1 பள்ளத்தூர்-1 ஆகும். பண்டக சாலை
வைகாசி விசாகத்திற்குப் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு நீர் மோர் பானகம் வழங்கிவருகின்றது.
கூட்டுறவுத்துறை சார்ந்த நிறுவனங்கள்
- தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சிக்கன நாணயச்சங்கம்
- மத்திய கூட்டுறவு வங்கி
- கூட்டுறவு வீட்டு வங்கி
- தாலுகா ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம்
- மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி
- டி.சி.டபுள்யூ ஐஎன்டியூசி தொலிலாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம்
கூட்டுறவு உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் லிட் உப்புத் தொழிலை நம்பி வாழுகின்ற தொழிலாளர்கள் நிறைந்த ஆறுமுகநேரியில் தொழிலாளர்களைப் பங்குதாரர்களாக உரிமையாளராக மாற்றிய பெருமை இக்கூட்டுறவு நிறுவனத்திற்கு உள்ளது. உப்புத் தொழிலாளர்கள் சங்கம் 500 உறுப்பினர்களுடன் ரூ.10 பங்குத் தொகையுடன் உருவாக்கப் பெற்றது. 22.2.1949 இல் அது கூட்டுறவு சங்கமாக வளர்ச்சி பெற்றது. எம்.எஸ்.செல்வராஜன் இதனுடைய தலைவராகவும் அமைப்பாளராகவும் பாடுபட்டார். கீரனூர் பகுதி உப்பளங்கள் ஆறுமுகநேரி பகுதி உப்பளங்கள் இவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் 38 ஏக்கர் சொந்த நிலத்திலும் 136 ஏக்கர் மத்திய அரசிடமிருந்தும் குத்தகை எடுத்தும் உற்பத்தி செய்யப் பெறுகின்றது. சொந்தமான லாரி, அயோடைஸ்டு உப்புபண்டல் செய்யும் இயந்திரங்களுடன் தரமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு உப்பு வாரியத்திடன் இணைந்து மூன்று மாவட்டங்களுக்குச் சிறப்பு பண்டல் செய்து வழங்கி வருகின்றது. உப்புத் தொழிலாளர்களின் நலனுக்காக 40 வீடுகளுடன் கமலா நேரு குடியிருப்பு உருவாக்கப்பட்டது. தற்போது 18 வீடுகள் லேமி திட்டத்தில் உருவாகியுள்ளது. இந்நாளில் 289 உறுப்பினர்கள் மட்டுமே இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். எம்.எஸ்.செல்வராஜன் 1949 முதல் 1989 வரை 40 ஆண்டுகள் தலைவராக இருந்தார். ஏ.பெரியசாமி 1990 இல் ஓராண்டு தலைவராக இருந்தார்.க.ஆறுமுகப்பெருமாள் 1996 முதல் 2000 வரை பணியாற்றினார். வியாபாரிகள் ஐக்கியச்சங்கம் ஆறுமுகநேரி மக்களும் வணிகமும் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. நூறாண்டுகளுக்கு முன்னர் மக்கள் பண்டமாற்று முறையிலே தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். வணிகத்திற்கு மாடும் கழுதையும் பொதி சுமந்திட பயன்படுத்தப்பட்டன. அரிசி, கடற்கரைப் பகுதியில் விளைந்த உப்பு பனைமரத்திலிருந்து கிடைக்கும் கருப்புக்கட்டி, கற்கண்டு, பனை ஓலைகள் பெட்டிகள் முதலியவைகள் நாட்டின் உட்புறம் அமைந்துள்ள ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு விளையும் பொருட்களுக்கு “பண்டமாற்றாக“ கொடுத்து வாங்கப் பெற்றன. சாலைவசதியும் போதிய பாதுகாப்பற்ற அக்காலத்தில் வியாபாரிகள் ஒவ்வொரு குழுக்களாகச் சென்று வருவர். கள்வரின் கொடுமையான அணுகுமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வீரப்பயிற்சி பெற்றோர் அக்குழுவில் இடம் பெற்றனர். சிலம்பம் வாள்வீச்சு முறைகளையும் வர்மப் பயிற்சிகளையும் பெற்றவர்களே வெளியூர் வியாபாரிகளாக இருந்தனர். பொதி மூடைகளுக்கிடையே வேல்கம்பு வாள் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயதங்களை மறைத்து வைத்து எடுத்துச் சென்றனர். கைத்தடிக்குள் கொடிய நஞ்சினைத் தோயத்தெடுத்த குத்தீட்டி மறைவாகப் பொருத்தி வைத்து கையில் கொண்டிருந்தனர். இவ்விதமானப் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஆறுமுகநேரி வணிகர்கள் முற்காலத்தில் மதுரை வரைச் சென்று வந்துள்ளனர். அவ்வாறான வியாபாரப் போக்குவரத்தாலும் பாதுகாப்பான இடத் தேவைகளாலும் ஆங்காங்கே பேட்டைகள் உருவாயின. தட்சிண(மாற) நாடார்களுக்கான மதுரைப் பேட்டை நிலத்தை ஆறுமுகநேரி வியாபாரிகளான செங்கக்குருமாரு நாடான் மகன் குமாரசாமி நாடான் பாண்டி நாடான் மகன் நாராயண பெருமாள் நாடான் ஆகிய இருவரும் கிபி 1821 இல் வழங்கியுள்ளனர். பல பேட்டைகள் உருவாகிட ஆறுமுகநேரி வியாபாரிகள் உதவியாய் இருந்தனர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நம்நாட்டில் குவிந்து கிடந்த அரிய பொருட்களை வியாபாரம் என்ற பெயரிலும் ஆராய்ச்சி என்ற வகையிலும் அள்ளிச் செல்ல சாலை வசதிகளை மேம்படுத்தினர். அதுவே நம்நாட்டின் வியாபாரிகளுக்கு சிறிய தொழில் செய்ய உறுதுணையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக வியாபாரிகள் ஆறுமுகநேரியில் ஓர் அமைப்பை உருவாக்கினர். அந்நாளில் ஏ.வி.சிவசுப்பிரமணிய நாடாரும் அவர்களுடைய சகோதரர்களான ஏ.வி.தெய்வப்பழம் ஏ.வி. பால்பாண்டியன் ஏ.வி. தங்கராஜ் ஏ.வி.கிருஷ்ணசாமி ஆகியோரும் வியாபாரிகளுக்கென அமைப்பு தேவை என கருதியதால் 1940 இல் ஒரு அமைப்பையும் சந்தை வியாபாரிகளுடன் இணைந்து அக்குழுவில் ஏ.வி. தெய்வப்பழம் நாடார் ல.கி.அரிகிருஷ்ணன் நாடார் சா.பொ.துரைராஜ் நாடார் சாக்குக்கடை துரைச்சாமி நாடார் கற்கண்டு என்ற சண்முக நாடார் ஆகியோர் இடம் பெற்றனர். வியாபாரத்தில் நேர்மை சேவை இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட அச்சங்கம் 1973 இல் சங்கங்களின் விதிகளைக் கொண்டு பதிவு செய்து முறையாக விளங்கியது. இம் மாவட்டத்தில் உள்ள பிற வியாபாரிகள் சஙகங்களுக்கு முன் உதாரணமாக இச்சங்கம் செயல்பட்டது. கடைவீதியில் சங்கத்திற்கென நிலம் வாங்கப்பட்டது. 1985 இல் திருமணமண்டபமும் கடைகளும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப் பெற்றது. பொதுமக்களும் சிறுவியாபாரிகளும் பயனடையும் விதத்தில் எளிய கட்டணத்திலான சிறந்த திருமண மண்டபம் உருவானது. வியாபாரிகளுடைய இடர்பாடுகள் மட்டுமின்றி மக்களுடைய பொதுவான பிரச்சனைகளுக்கும் குரல்கொடுப்பதில் முதலிடம் வகிக்கிறது இச்சங்கம். வியாபாரிகள் ஐக்கியச்சங்கம் ஆறுமுகநேரி இந்நாள் வரை சேவை செய்தவர்கள்
பத்திரிகை உலகிலும் கல்வித்துறையிலும் தமக்கென உயர்ந்த இடத்தில் உள்ள காயாமொழி அய்யா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் மக்கள் நலப் பணிகள் செய்வதற்காக இம்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள் பள்ளி மாணவ மாவியர்க்கு குறிப்பேடுகள் கல்லூரியில் பயில விரும்பும் மாணவருக்கு இட ஒதுக்கீடு இந்து மேல் நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் என இம்மன்றத்தின் நற்பணிகள் தொடர்கின்றன. 600 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் இவ்வமைப்பின் நிர்வாகிகளாக தலைவர் மு.வே.நித்தியானந்தம் செயலாளர் பி.எஸ்.ஆர்.எஸ்.ராஜாசிவானந்தன் பொருளாளர் ஏ.எஸ்.கணேஷ் பெருமாள் உள்ளனர். அய்யா அவர்கள் பொறியியல் கல்லூரியைத் தொடங்கியதைப் போன்று ஆறுமுகநேரி பேரூராட்சி எல்கைக்குள் சீர்மிகு பல்கலைக் கழகத்தையும் தொடங்க வேண்டும். |
|
0 comments