ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் வீட்டு குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் மூலம்
தண்ணீர் திருடப்பட்டால் 5 வருடங்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதோடு
மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும் என நிர்வாக அதிகாரி எச்சரிக்கை
விடுத்துள்ளார். ஆறுமுகநேரி டவுன் பஞ்., பகுதியில் கடந்த சில நாட்களாக
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பம்பிங் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால்
இதனால்
குடிநீர் சப்ளையும் குறைந்துள்ளது. குறைவான அளவே தண்ணீர் சப்ளை ஆவதால்
அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் முறையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும்
குடிநீர் இணைப்புகளில் ஆங்காங்கே மின்மோட்டார் மூலம் தண்ணீர்
உறிஞ்சப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பல
புகார்கள் வந்ததை அடுத்து பஞ்.,நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க
முடிவு செய்துள்ளனர். இதனிடையே ஆறுமுகநேரி டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி
முகம்மது இக்பால் ஷெரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
ஆறுமுகநேரி டவுன் பஞ்.,ல் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு
குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி
எடுத்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு
குடிநீர் வழங்கப்படாது. இவ்வாறு நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 comments