திருச்செந்தூர்:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக.,அமோக வெற்றி பெற்று
உள்ளதை முன்னிட்டு நேற்று திருச்செந்தூரில் கட்சியினர் பட்டாசு வெடித்து
இனிப்பு வழங்கி கொண்டாடினர்.புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக.,சார்பில்
போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றார். இதையடுத்து திருச்செந்தூரில் நேற்று அதிமுக.,பட்டாசு வெடித்தும்,
இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வெற்றியை கொண்டாடும் விதமாக
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தக்கார் கோட்டை மணிகண்டன்
கோயிலுக்கு வந்து இருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர பஞ்.,கவுன்சிலர் லட்சுமணன், வார்டு
செயலாளர் காவடி சங்கரன், இளைஞர் பாசறை வார்டு பொருளாளர் ராமன், மேலவை
பிரதிநிதி கண்ணன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்
ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அதிமுக.,வை சேர்ந்த கிருஷ்ணன்
உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் ஒன்றிய, நகர அதிமுக.,சார்பில்
ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து
இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்செந்தூர் கோயில் தக்கார் கோட்டை
மணிகண்டன், பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, நகர செயலாளர் மகேந்திரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
இதில் யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய
இதில் யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய
எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை,
கவுன்சிலர்கள் வடிவேல், லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் நகர பஞ்.,அலுவலகம் முன்பு நகர பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு
தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில்
துணை தலைவர் ராஜநளா, கவுன்சிலர்கள் வடிவேல், லட்சுமணன், சண்முகசுந்தரம்,
அரசு என்ற மீனா, இசக்கியம்மாள், காளிதாஸ், சாந்தி, பாஸ்டின், மகேசுவரி,
ஒன்றிய பாசறை செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments