ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூர்:திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.6வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான
பாதிப்புகளை நீக்கிட வேண்டும். ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மாறுதலை
நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும். தகுதி
உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்,
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஏற்படும்
நிர்வாக சிக்கல் நிவர்த்தி செய்ய கூடுதல் தலைமையாசிரியர்கள் பணியிடங்களை
உருவாக்கி ஊதிய குறைவின்றி நியமனம் செய்ய வேண்டும், அனைவருக்கும் கல்வி
இயக்கம் மூலம் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களை
(சிறப்பு ஆசிரியர்கள்) முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்தி கல்வித்துறையின்
கீழ் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வே ண்டும், மேற்கண்ட
கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நா டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருச்செந்தூர் கி ளை சார்பில் திருச்செந்தூர் உ தவித் தொடக்கக் கல்வி
அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார
தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ராஜமாதங்கண், மாநில
செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரன்,
முன்னாள் வட்டார தலைவர் நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வட்டார ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து
ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 15 ஆசிரியர்கள், 104
ஆசிரியைகள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் செல்வகுமார் பொன்ராஜ் நன்றி
கூறினார்.

0 comments

Leave a Reply