ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » சென்னையில் நடக்கும் இலவச திருமணத்திற்கு செந்தூரில் இருந்து 22 ஜோடிகள் பயணம்


திருச்செந்தூர்: சென்னையில் நடக்கும் இலவச திருமணத்தில் பங்கேற்க
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 22 ஜோடிகள் சென்றன.
பயணத்தை ஆர்.டி.ஓ.,பொற்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை
மூலமாக சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் அருகே நாளை (18ம்
தேதி) இலவச திருமணம் நடக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்ணுக்கு
நான்கு கிராம் தங்கத் தாலியும், மணமக்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான
சீர்வரிசை பொருட்களும் வழங்கப்படுகிறது. திருமணம் நடைபெறும் இடத்துக்கு
மணமகள் வீட்டார் சார்பில் 5 நபர்களும், மணமகன் வீட்டார் சார்பில் 5
நபர்களும் ஆக மொத்தம் 10 நபர்கள் அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
கோயிலில் இருந்து நேற்று 22 ஜோடிகள் இலவச திருமணத்துக்காக அனுப்பி
வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமை
வகித்தார். இணை ஆணையர் சுதர்சன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர்
ஆர்.டி.ஓ., பொற்கொடி கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார்.

திருச்செந்தூர்
கோயில் கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, ராமசாமி, ரோஷிணி,
குலசேகரன்பட்டினம், செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் மேற்பார்வையில்
பணியாளர்களை இவர்கள் அழைத்துச் செல்கிறார்கள். திருச்செந்தூர் கோயிலில்
இருந்து இலவச திருமணத்தில் கலந்து கொள்ளும் ஜோடிகள் மற்றும் உறவினர்கள் 4
பஸ்களில் செல்கிறார்கள். நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் சுப்பையன்,
நகர பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய அதிமுக.,செயலாளர் ராமச்சந்திரன்,
ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், நகர செயலாளர் மகேந்திரன்,
கவுன்சிலர் வடிவேல், தக்காரின் நேர்முக உதவியாளர் நாகராஜன், முன்னாள்
கவுன்சிலர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments

Leave a Reply