தூத்துக்குடி ஹோட்டல் பானுபிருந்தாவன் கிரீன் பார்க் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்க்கு ஓவியப் போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பானு பிருந்தாவன் கிரீன் பார்க் நிர்வாகி ஆத்தூர் மணி தலைமை வகித்தார். நடராஜன் வரவேற்றார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு 5வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உயிர் பிராணிகள் பாதுகாப்பு, 8 வயது முதல் 11 வயது வரை உள்ள நபர்களுக்கு வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பு, 12 வயது முதல் 15 வயது வரை உள்ள நபர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சிறப்புகள் போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டு சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் குருசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஓவிய சங்க தலைவர் தவசிமுத்து சிறந்த ஓவியங்களை தேர்ந்தெடுத்தார். சிறந்த ஓவியம் வரைந்த கீர்த்தனாவுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரத்து ஒன்றும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரத்து ஒன்று சாய்நரேனுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரத்து ஒன்று பிரியாவுக்கும் வழங்கப்பட்டது.

ஹோட்டல் பானு பிருந்தாவன் கிரீன் பார்க் நிர்வாகி ஆத்தூர் மணி பேசியதாவது, மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தூத்துக்குடியில் எங்களது நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றி. அறுசுவை வழங்கி வரும் பானு பிருந்தாவன் கிரீன் பார்க் சார்பில் ஆண்டுதோறும் இனி இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க முயற்சிகள் செய்யப்படும் என்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்க பரிசுகளும் பானு பிருந்தாவன் கிரீன் பார்க் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்க செல்வம், ரவிசங்கர், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இருதயராஜ் நன்றி கூறினார். பானு பிருந்தாவன் கிரீன் பார்க் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடந்த போட்டி ஏற்பாடுகளை ஆத்தூர் மணி தலைமையில் பொது மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
0 comments