சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மற்றும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 69 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி ஜெயசில்பா 1162 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவர் ஆனந்த் 1157 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், மாணவர் சோம்நாத் 1152 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். மாணவர் ஆனந்த் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.17 மாணவ, மாணவிகள் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 46 மாணவ, மாணவிகள் 1000 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். இதே போன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்விலும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 107 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பியூலா பிரேஸ்லின், பாத்திமா ரிஸ்மியா, ஜாஸ்மின் கிர்த்திகா ஆகிய 3 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி கணேஷ், தலைமையாசிரியை சுரோமணி ஜெயமுருகன், ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி உஷா ஆகியோர் பாராட்டினர்.

0 comments