ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகநேரிக்கு மின்சார மீட்டர் வருவதில் லேட் : புதிய மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவிப்பு

ஆறுமுகநேரி பகுதியில் மின்மீட்டர் வராததால் புதிய மின்இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 
ஆறுமுகநேரி டவுன் பஞ்., பகுதியில்புதிய வீடு கட்டுபவர்கள் புதிய மின் இணைப்பு கோரி மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை புதிய மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின்மீட்டர் வராததால் புதிய மின் இணைப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மின்இணைப்பு கிடைக்காததால் வீடு கட்டும் பணியை துவங்கியவர்கள் கட்டுமானப் பணிகளை போட்டுவிட்டு மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.புதிய வீடு கட்டி முடித்து மின் இணைப்பு வேண்டி காத்திருப்பவர்களும் வீட்டிற்கு குடிபெயர முடியாமல் தவிக்கின்றனர். எனவே ஆறுமுகநேரி பகுதியில் புதிய மின் இணைப்பு கோரி வெகு நாட்களாக காத்திருப்பவர்களுக்கு புதிய மின் மீட்டர்களை விரைவில் வரவழைத்து மின் இணைப்புகளை கொடுக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

0 comments

Leave a Reply