ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த மின்கேபிளை மாற்ற வேண்டும் என அதிமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆறுமுகநேரி பகுதிக்கு சாகுபுரத்தில் உள்ள ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் உள்ள மின்னூட்டியின் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்னூட்டி பழுதடைந்து விட்டது. இதனால் ஆத்தூர், புன்னக்காயல் பகுதிக்கு சப்ளை செய்யப்படும் மின்னூட்டியில் இருந்து மின்சப்ளை வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாகுபுரத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு வரும் உயர் அழுத்த மின்சார கேபிள் செல்வராஜபுரம் மேல்பகுதியில் ரயில்வே பாலத்திற்கு கீழ் எரிந்து விட்டது. இதனால் ஆறுமுகநேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு காயல்பட்டணம் பகுதிக்கு சப்ளை செய்யப்படும் லைன் மூலமாகவும், மேற்குப் பகுதியில் உள்ள இணைப்புகளுக்கு குரும்பூர் பகுதியில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் விளக்குகள் சரியாக எரிவதில்லை.மேலும் எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, ப்ரிட்ஜ், டியூப்லைட்களில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்துள்ள மின்கேபிளை உடனடியாக மாற்றி புதியதாக அமைக்க வேண்டும் என ஆறுமுகநேரி 1வது வார்டு கவுன்சிலர் லட்சுமணன் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-நன்றி தினமலர்
-நன்றி தினமலர்
0 comments