தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பூவரசூரைச் சேர்ந்தவர் முனைவர் த.த.தவசிமுத்து.இவர் இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் தலைவராக உள்ளார்;காந்திஜி நுகர்வோர் பேரவையின் தலைவராகவும் உள்ளார்.இவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி திருச்செந்தூர் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியிடம் ஆறுமுகநேரியில் அரசு பேருந்துகள் நிற்காமல் செல்லுவது குறித்து சில தகவல்களைக்கேட்டார்.ஆனால் உரிய காலக் கெடுவிற்குள் தகவல் தரப்படவில்லை.தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 08 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.தகவல் பெற ரூபாய் 10 இற்கான கட்டணத்தை அரசு நீதிமன்ற வில்லை வாயிலாகச் செலுத்தியதால் இந்த வழக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதாகக் கூறி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் நீதிபதி ராமச்சந்திரன்,உறுப்பினர் லியோனார்ட்வசந்த் ஆகியோர் இதனை விசாரித்து, திருச்செந்தூர் அரசு போக்குவரத்துக் கழக பொதுத்தகவல் அதிகாரி, நுகர்வோரின் மன உளைச்சலுக்கு ரூபாய் 10 ஆயிரம், வழக்கு நடைமுறை செலவாக ரூபாய் 3 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 13 ஆயிரத்தை நுகர்வோருக்கு வழங்க உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் மனுதாரரும் நுகர்வோருமாகிய தவசிமுத்துவே நேரடியாக வாதாடினார்.
தகவல் உரிமைச் சட்டப்படி தீர்வு காணப்பட வேண்டிய வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.தகவல் அறியும் சட்டப்படியான பொதுமக்களின் கடிதங்களுக்கு இனி உரிய நேரத்தில் உரிய அதிகாரிகள் பதில் வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

0 comments