கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரியும், போராட்டக்குழுவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.நெல்லை மாவட்டத்தில் பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை, தொம்மையார்புரம், உவரி, கூடுதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தப்பட்டன.தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், அமலிநகர், புன்னகாயல், கொம்புதுறை, சிங்கித்துறை, வீரபாண்டியன்பட்டணம், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.ஸ்டிரைக்கில் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரும் இடிந்தகரை போராட்டத்தில் கலந்து கொண்டனர். மீனவர்கள் போராட்டம் காரணமாக கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் பதட்டம் நிலவியது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
You Are Here: Home» திருச்செந்தூர் » கூடங்குளம் போராட்டக்குழுவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்

0 comments