கூடங்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டுமென, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதையடுத்து, அசம்பாவிதத்தை தடுப்பதற்காக, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் போலீசார் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி, இம்மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ளபுன்னக்காயல், திருச்செந்தூர் அடுத்தஅமலிநகர்,ஆலந்தலை,மணப்பாடு, பெரியதாழை ஆகிய ஐந்துமீனவ கிராமங்களில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாகன சோதனை நடத்தியும், ரோந்து சுற்றியும் பாதுகாப்புபணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடல்வழியாக படகில் கூடங்குளம் சென்றால், அவர்களை தடுப்பது குறித்த சிலதிட்டம் வகுத்துள்ளனர்.கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் எஸ்.பி., தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
You Are Here: Home» திருச்செந்தூர் » கடலோரக் கிராமங்களில் போலீசார் உஷார் நிலையில்
0 comments