நெல்லை மாவட்ட கல்வி அலுவலகம் முன் ஆசிரியை குடும்பத்துடன் தர்ணா : பரபரப்பு
தனியார் பள்ளி ஆசிரியை நெல்லை கல்வி அலுவலகத்தில் இன்று காலை குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கூடலை சேர்ந்தவர் ஆசிரியை மரகதவல்லி. விதவையான இவர் அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகன்கள் மனோஜ்குமார், லோகேஷ், மகள் மோனிகா மற்றும் சகோதரி கல்யாணி ஆகியோருடன் நெல்லை டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கல்வி அலுவலகம் முன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை மரகதவல்லிக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கிப்சன் போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டம் குறித்து ஆசிரியை மரகதவல்லி கூறுகையில், நான் கடந்த 27 ஆண்டாக முக்கூடல் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி கல்வி அலுவலகத்தில் மனு செய்தேன். தகுதியிருந்தும் எனக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வேறு ஒரு ஆசிரியருக்கு வழங்கியதாக நான் அறிந்தேன். பதவி உயர்வு கேட்டு கல்வி அதிகாரிகளை சந்தித்ததால் பள்ளி நிர்வாகம் கடந்த அக். 29ம்தேதி முதல் 2 மாத காலத்திற்கு என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நான் மனஉளச்சள்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை குடும்பத்துடன் மாவட்ட கல்வி அலுவலகம் முன் அமர்ந்து தொடர்ந்து போராடுவேன் என்றார்.
நெல்லை ,தூத்துக்குடி மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் ஏராளமாக உண்டு.தனியார் பள்ளிகள் அரசின் மானியம் பெற்று அரசின் விதிகளுக்குட்பட்டு நடத்தப்பட வேண்டும்.ஆனால் குறுநில மன்னர்கள்போல ஆசிரியர்களைப் பழி வாங்குவது வாடிக்கையாகிப்போயிவிட்டன.அரசு சரியான முறையில் தணிக்கை செய்து மானியத்தை ரத்து செய்து சீர் செய்யவேண்டும்.
இதுபோல பாதிக்கப்படுவோர் முன்வரவேண்டும்.சர்வாதிகார நிர்வாகத்தின் அராஜகத்தை அரசுக்கு எடுத்துக்கூறி நீதி பெறவேண்டும்
0 comments