பெருந்தலைவர் காமராஜர் இரத்ததானக் கழகம் – ஆறுமுகனேரி -628202 தலைவர்-முனைவர் த.த.தவசிமுத்து-9176051116. செயலாளர்–சோழர் ஆர்.செல்வின்-9442814316. பொருளாளர்–எஸ்.சி.சிவசங்கர்.9150305511, இணைச்செயலாளர்–ஜெ.அந்தோணிராஜ்9486380800 துணைத் தலைவர் – சி.கணேஷ் பெருமாள்.,,நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள்- ஜேம்ஸ்., பி.வரதராஜன்.,சுந்தர்லிங்கம் டி.செல்வராஜ்.,எஸ்.ஜெ.செந்தில்குமார், பி.ஏ.சுந்தர்ராஜ்., சி.முருகானந்தம்., சோழர் ஆர்.சி.ஜெயகுமார்., டி.ஜெயராமன்., தி.கணேஷ் செந்தில்., எம்.ராஜாஅய்யம்பெருமாள்., எஸ்.செந்தூர்பாண்டியன்., எம்.ரத்தினசபாபதி., என்.ஆறுமுகராஜ்.,சோழர் பி.சுந்தர்.,ஏ.மோகன்., லோகநாதன்., கெளரவ ஆலோசகர்கள். பி.எஸ்ஆர்.ஜெயானந்தன்.,சோழர் ஆர்.சுந்தர்,, ரெ.காமராஜ்., எஸ்.சண்முகபார்த்திபன்,
முகாம் பொறுப்பு-பழனிச்சாமி.
அவசர தொடர்பு செல்போன் நம்பர்கள்-9150305511,9486380800
முகாம் பொறுப்பு-பழனிச்சாமி.
அவசர தொடர்பு செல்போன் நம்பர்கள்-9150305511,9486380800

பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு
நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில் அமைந்துள்ள
பெருநிலப்பரப்பையும்
இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு
கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின்
முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3
கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின்
இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்
(முதலில் பாந்திரா-வொர்லி கடற்பாலம் )
ஆகும். இப்பெயரில் பேருந்து, தொடருந்துப்
பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும்,
பொதுவாக தொடருந்துப் பாலத்தையே
குறிப்பிடுவர்.
தொடருந்து பாலம்
இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக
நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன்
நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி
(2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு
திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள்
செல்வதற்கு ஏதுவாக பாலத்தின்
நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு
ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.
தொடக்கத்தில் குறுகிய அகல
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே
கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு
இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு
புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும்
கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின்
வழியாகச் செல்கின்றன.
நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில் அமைந்துள்ள
பெருநிலப்பரப்பையும்
இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு
கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின்
முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3
கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின்
இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்
(முதலில் பாந்திரா-வொர்லி கடற்பாலம் )
ஆகும். இப்பெயரில் பேருந்து, தொடருந்துப்
பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும்,
பொதுவாக தொடருந்துப் பாலத்தையே
குறிப்பிடுவர்.
தொடருந்து பாலம்
இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக
நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன்
நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி
(2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு
திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள்
செல்வதற்கு ஏதுவாக பாலத்தின்
நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு
ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.
தொடக்கத்தில் குறுகிய அகல
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே
கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு
இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு
புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும்
கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின்
வழியாகச் செல்கின்றன.
பேருந்து பாலம்
ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன்
முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா
காந்தி பேருந்து மேம்பாலம் என்ற
பெயரில் அழைக்கப்படுகிறது. இம்
மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள
தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும்
தொடருந்துப் பாலத்தையும் காண
முடியும்.
ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன்
முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு
தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா
காந்தி பேருந்து மேம்பாலம் என்ற
பெயரில் அழைக்கப்படுகிறது. இம்
மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள
தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும்
தொடருந்துப் பாலத்தையும் காண
முடியும்.
கட்டுமானம்
பாம்பன் பாலம்
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065
மீ ) நீளமானது[1] . இதன் கட்டுமானம் 1913 ஆம்
ஆண்டில் துவங்கி 18 மாதங்களில்
முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம்
ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.ப்
பாம்பன் பாலம்
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065
மீ ) நீளமானது[1] . இதன் கட்டுமானம் 1913 ஆம்
ஆண்டில் துவங்கி 18 மாதங்களில்
முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம்
ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.ப்
இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு
ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத்
தூக்குவதற்கு ஏற்றவாறு
வடிவமைத்துள்ளனர் ( இராட்டணப் பாலம் ).
இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன்
இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம்
220 அடி ஆகும்.
ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத்
தூக்குவதற்கு ஏற்றவாறு
வடிவமைத்துள்ளனர் ( இராட்டணப் பாலம் ).
இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன்
இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம்
220 அடி ஆகும்.
கட்டுமானப் பொருட்கள்
பாலம் கட்ட தேவையான 18,000 டன்
சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும்,
மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும்
எடுத்து வரப்பட்டது.
இதனை கட்ட சிமெந்து 5000 டன், எஃகு
இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
புதுப்பித்தல்
தொடக்கத்தில் குறுகிய அகல
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே
கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு
இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல்
புதுப்பித்தது [1] . ஒவ்வொரு மாதமும்
கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின்
வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு
முறை திறக்கப்படுகிறது. இதன்
நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு
கொண்டாடப்பட்டது[2] .
பாலம் கட்ட தேவையான 18,000 டன்
சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும்,
மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும்
எடுத்து வரப்பட்டது.
இதனை கட்ட சிமெந்து 5000 டன், எஃகு
இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
புதுப்பித்தல்
தொடக்கத்தில் குறுகிய அகல
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே
கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை
தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு
இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல்
புதுப்பித்தது [1] . ஒவ்வொரு மாதமும்
கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின்
வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு
முறை திறக்கப்படுகிறது. இதன்
நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு
கொண்டாடப்பட்டது[2] .
வலிமை
பாம்பன் பாலம் உலகின் மிகவும்
துருப்பிடிக்கத்தக்க பகுதியில் ( ஐக்கிய
அமெரிக்காவின் மயாமிக்கு
அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள்
மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே
இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல்
கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும்
பகுதியுமாகும் [1] 1964 ல் நிகழ்ந்த
தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு
எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இந்திய முதன்மை பகுதியில் இருந்து
இராமேசுவரம் தீவை இணைக்கும் ரயில்
பாம்பன் பாலம் உலகின் மிகவும்
துருப்பிடிக்கத்தக்க பகுதியில் ( ஐக்கிய
அமெரிக்காவின் மயாமிக்கு
அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள்
மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே
இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல்
கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும்
பகுதியுமாகும் [1] 1964 ல் நிகழ்ந்த
தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு
எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இந்திய முதன்மை பகுதியில் இருந்து
இராமேசுவரம் தீவை இணைக்கும் ரயில்
பாலம்
அமைவு
நீரிணையின் இரண்டு கிமீ தொலைவுக்குப்
பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப்
பெருநிலப்பரப்பையும்,
இராமேசுவரத்தையும் இணைக்கும்
ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.
அமைவு
நீரிணையின் இரண்டு கிமீ தொலைவுக்குப்
பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப்
பெருநிலப்பரப்பையும்,
இராமேசுவரத்தையும் இணைக்கும்
ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.

பிகார் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்ற போதும் , 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல், நோட்டா' பொத்தானை அமுக்கி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 9,00,721 வாக்காளர்கள் நோட்டா-வுக்கு வாக்களித்துள்ளனர். இது பதிவான மொத்த வாக்குகளில் 2.5 சதமாகும்.
தாவரங்கள்
தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார்வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன. இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன. கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.
விலங்குகள்
மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும். மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.தற்பொழுது பரந்து நிற்கும் மன்னார்வளை குடாவில் ஆலைக் கழிவுகளும் கடல்வாழ் உயிரினங்களுக்கும்,மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது

காணாமல் போகும் தாமிரபரணி...
------------------------------------------------
தலைப்பை எழுதுவதற்கே கை அதிர்கிறது. ஆனால், உண்மையில் ஒரு நதியைக்காலி செய்யும் முயற்சியில் அரசும், பன்னாட்டுக்கம்பெனிகளும் இறங்கும் போது, "கையறு நிலையில்" நிற்கும் மக்கள்...
தலைமுறை, தலைமுறையாய் ஆற்றோடு பிணைந்திருந்த மக்கள் இதன் பின்விளைவுகளை தெரிந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே.
பத்தாண்டுகளுக்கு முன்பு கோக் கம்பெனி கங்கைகொண்டானில் ஆலை அமைக்கும்போதே பல வழிகளில் எதிர்த்தோம். எழுத்தாளர் சங்கம் உட்பட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள்,மறியல் போராட்டங்கள் நடத்தின. மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடந்து, பலர் கைதாகி சிறை சென்றனர். ஆவணப்பட இயக்குனர் கதிர் " மூழ்கும் நதி" என்ற ஆவணப்படம் எடுத்தார். அதை வெளிவராமல் தடுக்க, ஆலை நிர்வாகமும், காவல் துறையும் முயற்சி செய்தன. அதையும் மீறி எழுத்தாளர் சங்கம் சார்பில் திரையிட்டோம். எல்லாமே, தாமிரபரணி நதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதி தான்.
வற்றாத ஜீவநதி தாமிரபரணி..இங்குள்ள மக்களுக்கு விவசாயத்திற்கும், குடி நீருக்கும் ஜீவாதாரமான நதி. நெல்லை மட்டும் அல்ல, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீருக்கு இதுவே ஆதாரம்.
திருநெல்வேலி அல்வாவிற்கு சுவை கூட்டுவதும் தாமிரபரணி தண்ணி தான். ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சும் கோக் ஆலை..
இப்போது அதற்குத் துணையாக, பெப்சி கம்பெனியும் தாமிரபரணியை உறிஞ்ச வந்து விட்டது. ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட இருக்கிறது. எல்லாத்தண்ணியும் பாட்டில்களுக்குள் போய் விட்டால், மக்கள் குடிக்க எங்கே போவது ? விவசாயம் எப்படி செழிப்பது ? தமிழ்நாட்டில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஆறு தாமிரபரணி ஆறு தான். அகத்திய மாமுனி கமண்டலத்தில் இருந்து கொட்டிப் பெருகிய ஆறு தாமிரபரணி என்று புராணம் சொல்கிறது. பெருகிய தண்ணீரை மீண்டும் புட்டிக்குள் அடைக்கும் வேலைகளை பன்னாட்டுக்கம்பெனிகள் செய்யத் துவங்கி விட்டன.
காலம் காலமாய், குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் குளித்து மகிழ்ந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை..
புதுமைப்பித்தனின் கதைகள் நெடுக வியாபித்து நிற்கும் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் படித்துறைகள்..மீன்கள் துள்ளும் பாபநாசம் தலையணை...எல்லாமே கனவாய்ப் போய் விடுமோ என்ற அச்சம் மனதிற்குள் நிலைகொள்ள ஆரம்பித்து விட்டது.
தாமிரபரணியை கின்லே பாட்டிலில் மட்டுமே பார்க்கும் அடுத்த தலைமுறை உருவாகி விடும் அவலம் கண் முன்னே தெரிகிறது.
"நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி வளர்ந்த இளந்தென்றலே.." என்று பாடலில் உருகினால் மட்டும் போதுமா..நமது நதியைக் காப்பாற்ற வேண்டாமா ?
சற்றே காலதாமதம் என்றாலும், பல்வேறு கட்சிகள் இணைந்து நவம்பர் 16 இல் பெப்சிக்கு அனுமதி கொடுப்பதை எதிர்த்து நெல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கின்றன.
நெல்லை மக்களே..வழக்கம் போல வேடிக்கை பார்க்காமல், நதி காக்கும் போராட்டத்தில் இணைந்து நின்று போராடுவோம்..!
முழு மூச்சுடன் போராடினால், நாம் அனைவருமே தாமிரபரணியைக் காப்பாற்றலாம் !
நன்றி-ஆர்.நாறும்பூ நாதன்
மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் அலட்சியமே புவி வெப்பமயமாதலும் காற்று நீர் நிலம் மாசடைவதும் அதன் காரணத்தால் புதிது புதிதாக மக்களுக்கு ஏற்படும் பலவித நோய்களுக்கும் ஆகும். இவர்களின் பணியை கண்காணிப்பதும் சமூக ஆர்வலர்களின் பொறுப்புமிக்க கடமையாகும்.
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
நிலம் நீர் காற்று போன்றவற்றில் மாசு ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுக்கும் பணியைச் செய்வது தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம். ஒழுக்கமற்ற அரசு அலுவலர்களின் முறைகேடுகளின் காரணமாக மாசுக்கட்டுப்பாடு துறை ஊழல் துறை என்று சொல்லும் அளவுக்கு மோசமாகிவருவது அந்த துறைக்கு மட்டும் அல்ல எதிர்கால இந்திய மக்களுக்கும் மனிதகுலத்திர்க்கே கேடு விளைவிக்கும்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். *(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால் விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....*(எதிலும் முன்னெச்சரிக்கைஅவசியம்.)
*5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
* நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
* 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது.
அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது ------------------------இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...
*1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். *(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால் விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....*(எதிலும் முன்னெச்சரிக்கைஅவசியம்.)
*5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
* நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
* 6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது.
அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது ------------------------இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...
நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலிடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..!
உன் வாழ்க்கை...
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலிடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..!
உன் வாழ்க்கை...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணைய சார்புச் செயலர் பிரிவு அலுவலர் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆட்சியர் ம. ரவிகுமார் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 75 ஆயிரத்து 750 பெண் வாக்காளர்கள், இதர பிரிவினர் 45 பேர் என மொத்தம் 13 லட்சத்து 39 ஆயிரத்து 354 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 999 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 357 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆன்லைன் மூலம் 1,170 பேரும், நேரடியாக 51 ஆயிரத்து 522 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தின்போது, வாக்காளர் பட்டியலில் குழப்பம் உள்ளதாகவும், பல்வேறு இடங்களில் இரட்டைப் பதிவு நிகழ்துள்ளதாகவும், சிலரின் பெயர் தேவையின்றி நீக்கப்பட்டுள்ளதாகவும் திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3–ஆம் தேதி ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 904 ஆக இருந்தது. அதையடுத்து விலை தொடர்ந்து சரிந்தது.
நேற்று ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 640 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 504 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.2,438–க்கு விற்கிறது.
பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தை விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளியும் இன்று கிலோவுக்கு ரூ.555 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்து 220 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.37.70–க்கு விற்கிறது.
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள தனியார் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கால தாமதம் ஆகி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தில் அரசு நிதி உதவி பெறும் தனியார் 32 உள்ளது. இதில் 8 நடுநிலைப்பள்ளியும் அடங்கும். இதில் 120 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு ரூ 5 ஆயிரம் முன் பணம் வழங்கப்படும்.
இந்த பணம் அடுத்து வரும் 10 மாதத்துக்கு மாதம் 500 ரூபாய் பிடித்ம் செய்யப்படும். இந்த வருடம் இது வரை அந்த பணம் வேண்டி ஸ்ரீவைகுண்டம் கருவூலத்துக்கு பில் அனுப்பி வைத்தனர். ஆனால் பணம் இல்லை என்று திரும்பி விட்டது. மேலும் இந்த முன்பணம் வழங்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் பணம் வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக பணம் அனுப்பபட்டு, அங்கு பணம் வாங்க ஆசிரியர் இல்லாமல் அந்த பணம் கருவூலத்தில் அப்படியே உள்ளது. ஆனால் தனியார் உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் போதிய பணம் வழங்கவில்லை. எனவே அனைவரும் தீபாவளி முன்பணம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் முறைப்படி மாவட்ட கல்வி அலுவலகத்தினை அனுகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. தீபாவளிக்கு இரண்டு நாளே உள்ள நிலையில் பணம் வழங்காதது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி-தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது..
பிரதான பாசன அணையான பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று 85.40 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 86.45 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 879 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று இந்த அணைப்பகுதியில் 50 மீ.மீ மழை பெய்தது. இதனால் அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர் வர தொடங்கி உள்ளது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 99.28 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 65.80 அடியாக அதிகரித்து உள்ளது.
இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.50 அடியாக இருந்தது. இது இன்று 74 அடியாக உயர்ந்து உள்ளது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 72.50 அடியாக இருந்தது. இது இன்று 73 அடியாக உயர்ந்து உள்ளது. 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் தொடர் மழையினால் நேற்று நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதேபோல குண்டாறு அணையும் நிரம்பி உள்ளது. இந்த அணைக்கு வரும் தண்ணீரும் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பியது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 104.25 அடியாக உயர்ந்து உள்ளது. 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 26 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், 23.60 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.19 அடியாகவும் அதிகரித்து உள்ளன.
நெல்லை மாவட்ட கல்வி அலுவலகம் முன் ஆசிரியை குடும்பத்துடன் தர்ணா : பரபரப்பு
தனியார் பள்ளி ஆசிரியை நெல்லை கல்வி அலுவலகத்தில் இன்று காலை குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கூடலை சேர்ந்தவர் ஆசிரியை மரகதவல்லி. விதவையான இவர் அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகன்கள் மனோஜ்குமார், லோகேஷ், மகள் மோனிகா மற்றும் சகோதரி கல்யாணி ஆகியோருடன் நெல்லை டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கல்வி அலுவலகம் முன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை மரகதவல்லிக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கிப்சன் போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டம் குறித்து ஆசிரியை மரகதவல்லி கூறுகையில், நான் கடந்த 27 ஆண்டாக முக்கூடல் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி கல்வி அலுவலகத்தில் மனு செய்தேன். தகுதியிருந்தும் எனக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வேறு ஒரு ஆசிரியருக்கு வழங்கியதாக நான் அறிந்தேன். பதவி உயர்வு கேட்டு கல்வி அதிகாரிகளை சந்தித்ததால் பள்ளி நிர்வாகம் கடந்த அக். 29ம்தேதி முதல் 2 மாத காலத்திற்கு என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் நான் மனஉளச்சள்,பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை குடும்பத்துடன் மாவட்ட கல்வி அலுவலகம் முன் அமர்ந்து தொடர்ந்து போராடுவேன் என்றார்.
நெல்லை ,தூத்துக்குடி மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் ஏராளமாக உண்டு.தனியார் பள்ளிகள் அரசின் மானியம் பெற்று அரசின் விதிகளுக்குட்பட்டு நடத்தப்பட வேண்டும்.ஆனால் குறுநில மன்னர்கள்போல ஆசிரியர்களைப் பழி வாங்குவது வாடிக்கையாகிப்போயிவிட்டன.அரசு சரியான முறையில் தணிக்கை செய்து மானியத்தை ரத்து செய்து சீர் செய்யவேண்டும்.
இதுபோல பாதிக்கப்படுவோர் முன்வரவேண்டும்.சர்வாதிகார நிர்வாகத்தின் அராஜகத்தை அரசுக்கு எடுத்துக்கூறி நீதி பெறவேண்டும்
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பு ஹோமங்கள் மற்றும் ஸ்ரீவிநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளை சு.அய்யப்ப பட்டர் நடத்தினார். தொடர்ந்து ஸ்ரீவிநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வலம் வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்த ஜன சபை பொருளாளர் எஸ்.அரிகிருஷ்ணன், பன்னிரு திருமுறை குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
‘உழைப்பே உயர்வு தரும்’ ‘உழைப்பவர் வளம் பெறுவர்’ என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுமை அடையச் செய்யும். உற்பத்தியை பெருக்கு வதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
எனவே தான் அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
2. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத் தொகை தற்போது வழங்கப்படும்.
3. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
6. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
7. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
8. தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
10. தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் அனைத்து தகுதியுள்ள பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
11. தமிழ்நாடு ஜரிகை ஆலை நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.