ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பு ஹோமங்கள் மற்றும் ஸ்ரீவிநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளை சு.அய்யப்ப பட்டர் நடத்தினார். தொடர்ந்து ஸ்ரீவிநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வலம் வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்த ஜன சபை பொருளாளர் எஸ்.அரிகிருஷ்ணன், பன்னிரு திருமுறை குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments