பக்கவாதம் ஏற்பட்டால் ஒரு நிமிடத்துக்கு 19 லட்சம் மூளை செல்கள் இறக்க நேரிடும் என, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் சதீஷ்குமார் கூறினார்.
உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் அக்டோபர் 29-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் நரம்பியல் துறையின் மூத்த நிபுணர் தினேஷ் நாயக், சீதீஷ்குமார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.5 கோடி பேர் பக்கவாதத்தில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 50 லட்சம் பேர் நிரந்தரமாக ஊனமாகிவிடுகின்றனர்.
இந்தியாவைப் பொருத்தவரை 15 லட்சம் பேர் ஓராண்டுக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களில் 12 சதவீதத்தினர் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய்கள், புகைப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் உண்டாகிறது.
உடல் சோர்வு, திடீர் பார்வை குறைபாடு, பேச்சில் குளறல், தலைவலி, சீரற்ற முகம் உள்ளிட்டவை பக்கவாதத்துக்கான முக்கிய அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும். பக்கவாதம் ஏற்பட்ட உடன் மூளையில் உள்ள செல்கள் இறக்கத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு 19 லட்சம் மூளை செயல்கள் இறக்க நேரிடும். எனவே மாரடைப்பைப் போன்று பக்கவாதம் ஏற்பட்ட உடன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

0 comments