தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த யூனிட்டுகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக சில நாட்கள் நிறுத்தப்படும். அப்போது பராமரிப்பு பணி நடக்கும் யூனிட்டை தவிர மற்ற யூனிட்டுகளில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெரும்.
சமீப காலமாக இங்குள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்படுகிறதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் 2–வது யூனிட் கொதிகலனில் இன்று காலை திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த யூனிட் நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2–வது யூனிட் பழுதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments