ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » சிலம்பப் போட்டி: கா.ஆ. பள்ளி மாணவர் சாதனை

ஆறுமுகனேரி கா.ஆ. மேனிநிலைப் பள்ளி மாணவர் மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 3 ஆவது இடம் பெற்ற சாதனை படைத்துள்ளார்.

தமிழக முதல்வர் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளிவில் சப் ஜுனியர் பிரிவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் பாலசுப்பிரமணியன் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். இதனையடுத்து சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவர் மாநில அளவில் 3 ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எல்.ராஜாமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். சிலம்பம் பயிற்சியாளர் ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநர் விஜயசிங், உடற்பயிற்சி ஆசிரியர் அரிராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Courtesy: Dinamani.com
Tags: Daily News

1 comments

  1. Unknown says:

    Memories bring back.Congrats BALA.

Leave a Reply