ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News , News , ஆறுமுகநேரி » மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் 9 வது ஆண்டு நினைவு வீரவழிபாடு இன்று நடக்கிறது.


அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்புபேரவை நிறுவனர் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையார் 
9 வது ஆண்டு நினைவு வீரவழிபாடு இன்று நடந்தது
வெங்கடேஷ் பண்ணையார் படம் பொருந்திய ரதம் முத்தையாபுரத்திலிருந்து ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்தை சொர்ணவேல் குமார் தலைமையில் முத்தையாபுரம், ஊர் சமுதாய தலைவர்கள் முன்னிலையில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு ஜோதிகள், முத்தையாபுரம் ராஜீவ்நகர், தங்கம்மாள்புரம், மற்றும் தூத்துக்குடி பிரையண்ட் நகர், சிதம்பரம் நகர், சண்முகபுரம், ராஜகோபால் நகர், ராஜீவ் நகர் மற்றும் பசுவந்தனை, தருவைகுளம், வேப்பலோடை, குளத்தூர், வேம்பார் ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்டு முத்தையாபுரத்தில் இருந்து செல்லும் ரதத்துடன் இணைந்து ஆறுமுகநேரி வழியாக அம்மன்புரம் சென்றடைந்தது. நிகழ்ச்சியில் முத்தையாபுரம் சண்முகம், சுரேஷ், வேல்முருகன், சவரிமுத்து, சிலுவை, சண்முகம், ராஜீவ்நகர் குட்டிமணி மற்றும் அத்திமரப்பட்டி ராமஜெயம் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் அறிவுறுத்தலின்பேரில் நிகழ்ச்சி அமைதியாக நடந்தது. அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். தமிழகமெங்குமிருந்து ஏராளமான் வாகனங்களில் பேரவை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 comments

  1. Unknown says:

    panniyar pugal valka

Leave a Reply