ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Daily News » திருச்செந்தூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு

திருச்செந்தூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 366-வது புதிய கிளை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் நாகேந்திரமூர்த்தி தலைமை வகித்தார். பொது மேலாளர் செல்வன்ராஜதுரை முன்னிலை வகித்தார்.

புதிய கிளையினை பிஜி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் அ.ராமமூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்ததனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெ.ஜெயந்தி குத்துவிளக்கேற்றினார். பாதுகாப்பு பெட்டகத்தை பழனி ஹோட்டல் கண்பத் நிர்வாக இயக்குநர் நா.ஹரிஹரமுத்து அய்யரும், கணினி சேவையை திருச்செந்தூர் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபுவும், புதிய 624-வது ஏடிஎம் சேவையை வங்கி முன்னாள் இயக்குநர் பரமன்குறிச்சி தொழிலதிபர் சத்தியசீலன் ஆகியோரும் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில்  உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மகளிர் கல்லூரிச் செயலர் கி.தாண்டேஸ்வரன், தொழிலதிபர் ஆர்.ராமகிருஷ்ணன், பொறியாளர் கி.நாராயணன், காங்கிரஸ் மாவட்டச்செயலர் நா.லோகநாதன், தொழிலதிபர் மூக்கன், தேவஸ்தான பிரசாத ஸ்டால் நா.ராமன், அர்ச்சனா ஓட்டல் கிட்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல மேலாளர் போஸ் வரவேற்றார். கிளை மேலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

Courtesy: dinamani.com
Tags: Daily News

0 comments

Leave a Reply