திருச்செந்தூர் ஒன்றிய தேமுதிக.,வினர் வரும் 4ம் தேதி
கோவில்பட்டி வருகை தரும் சட்டசபை எதிர்கட்சி தலைவரும் கட்சியின் நிறுவனத்
தலைவருமான விஜயகாந்தை ஏராளமானோர் 30 வாகனங்களில் சென்று வரவேற்க முடிவு
செய்துள்ளனர்.
வருகின்ற 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாநகருக்கு
தேமுதிக.,நிறுவனத் தலைவரும் சட்டசபை எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த்
வருகின்றார். இதுகுறித்து திருச்செந்தூர் ஒன்றிய தேமுதிக.,அலுவலகத்தில்
கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் சேகர்
முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கோவில்பட்டியில் மக்கள் நல
பணித்திட்டம் வழங்கி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும்
கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தை வரவேற்க 30 வாகனங்களில் செல்வது
என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர்
பூச்சிக்காடு சுரேஷ், ஒன்றிய பொருளாளர் வக்கீல் அபுதாஹிர், மாவட்ட
பிரதிநிதிகள் பேராச்சி செல்வன், ஆனந்தராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள்
பரமசிவன், பேச்சிமுத்து, சுரேஷ், பார்த்திபன், நகர அவை தலைவர் ராமன், நகர
பொருளாளர் வீரமணி, ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் சிவராஜ், நகர துணைச்
செயலாளர் முருகன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பேச்சியம்மாள், ஒன்றிய
மகளிரணி செயலாளர் பார்வதி, நகர மகளிரணி செயலாளர் பன்னீர்செல்வி உட்பட கட்சி
நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments