திருச்செந்தூரில் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் டி.தாமோதரன் தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகச் செயலர் பி.ஜெயகீதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார் அறிமுக உரையாற்றினார். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஐ.விஜயராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் எஸ்.ராஜன் ஆகியோர் பேசினர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.பிரபாகரன், பேராசிரியர் என்.வி.சுஜாத்குமார், மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்எஸ்.சுபாகரன், ஆறுமுகனேரி கனரா வங்கி மேலாளர் எம்.கண்ணன் உள்ளிட்டோரும் பேசினர். தூத்துக்குடி இந்தியன் வங்கி மேலாளர் முத்துக்குமார், பாமக தொழிற்சங்க மாவட்டச் செயலர் அ.சிவபெருமாள், மேலதிருச்செந்தூர் ஊராட்சித் தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாகச் செயலர் வி.மதிவாணன் வரவேற்றார். இணை நிர்வாகச் செயலர் எம்.ஏ.ராஜன் நன்றி கூறினார்.

0 comments