ஆறுமுகனேரி அருகேயுள்ள சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பழையகாயல் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கமலாவதி நினைவு சுழற்கோப்பைக்கான, 15-வது ஆண்டு கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணியை, புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.வின்சென்ட் ஆகியோரை பள்ளித் தாளாளரும், பங்குத்தந்தையுமான பவுல் ராபின்ஸ்டன், தலைமை ஆசிரியர் சேவியர் சகாயராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
You Are Here: Home» News , ஆறுமுகநேரி » கிரிக்கெட்: பழையகாயல் அணி வெற்றி
0 comments