ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் கபடி போட்டி பரிசளிப்பு விழா

திருச்செந்தூர் கபடி போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் இந்து துவக்கப்பள்ளியில் வைத்து மின்னொளி கபாடி போட்டி நடந்தது.போட்டிக்கு சுப்பிரமணியபுரம் ஊர்த்தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஊர்த்தலைவர்கள் வடக்கு தெரு பாலசங்கர், மேற்குத்தெரு பண்டாரம், தெற்குத்தெரு பாக்கியராம், அடைக்கலாபுரம் தங்கராஜ், ராமசாமிபுரம் தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலர் ஆறுமுகம், வட்டார நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு, செயலர் சுரேஷ், காய்கனி மார்கெட் சங்கத்தலைவர் திருப்பதி, மிஸ்டர் இந்தியா காமராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள் அந்தோணிட்ரூமன், சுதாகர், முருகானந்தம் உட்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 12 அணிகள் பங்கு பெற்ற போட்டியில் முதலிடத்தை திருச்செந்தூர் ராடன் அணியும், இரண்டாமிடத்தை மணல்மோட்டா அணியும், மூன்றாவது இடத்தினை காயல்பட்டணம் துர்க்கா செவன் அணியும் பெற்றன. சிறந்த ஆட்டக்காரர் விருதினை செம்பூர் முருகன் பெற்றார். முதலிடத்திற்கான பரிசினை காமராஜர் வியையாட்டுக்கழக அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ் வழங்கினார்.

0 comments

Leave a Reply