உடன்குடி அருகே கொட்டங்காடு இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு
புதிய ஏற்பாடு வழங்கியதால் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி பொதுமக்களிடம் சமரசம் செய்தார். இதனால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது.உடன்குடி அருகே கொட்டங்காடு இடைச்சிவிளை பஞ்.,யூனியன்
நடுநிலைப்பள்ளியில் கடந்த ஜூன் 15ம் தேதி பள்ளி காம்பவுண்டில் விளையாடிக்
கொண்டிருந்த மாணவர்களிடம் சில நபர்கள் புதிய ஏற்பாடு புத்தகம் வழங்கியதாக
தெரிகிறது. இதை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால்
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நேற்று ஜூன் 18ம் தேதி தங்களது குழந்தைகளை
பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளி தலைமையாசிரியர் தமிழரசியிடம் புத்தகம்
வழங்கியது யார்? என விளக்கம் கேட்டுள்ளனர். இது போன்று ஊர் முழுவதும் உள்ள
பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கேள்விப்பட்ட குலசேகரன்பட்டணம் சப்இன்ஸ்பெக்டர் பால்ஐசக்,
விஏஓ.,செல்வக்குமார் மற்றும் போலீசார் வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
இந்நிலையில் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் பரமன்குறிச்சி
இந்நிலையில் மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் பரமன்குறிச்சி
ஜெயக்குமார், மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் சுந்தரவேல் ஐய்யப்பன்,
உடன்குடி ஒன்றிய பாஜக.,தலைவர் ராமதாஸ், பொதுச் செயலாளர்கள் சங்கர், ரவி
உட்பட இந்து முன்னணி, பாஜக.,வின் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களும் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு
அழைத்துச் செல்வோம் என குரல் எழுப்பியதால் நிலைமை மோசமானதால்
திருச்செந்தூர் டிஎஸ்பி.,ஞானசேகர், திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி
மற்றும் போலீசார், பொதுமக்கள், இந்து முன்னணி, பாஜக.,பிரமுகர்களை அழைத்து
பேசினர். இதில் உடன்குடி தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகள், பள்ளி
தலைøயாசிரியர், விஏஓ.,ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய ஏற்பாடு புத்தகம்
வழங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். மேலும் மாணவர்களிடம் இருந்து கைப்பற்றிய புதிய ஏற்பாடு
புத்தகத்தை போலீசார் எடுத்துச் சென்றனர்.
0 comments