முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியுள்ளது.மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் குழு இன்று அணையை ஆய்வு செய்தது.
இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்தனர்.
பேபி அணை, பிரதான அணை மற்றும் 13 மதகுகளை ஆய்வு செய்த அவர்கள் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் போன்றவற்றை கண்காணித்தனர். அதன்பின் இன்று மூவர் குழு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பிற்கு மூவர் குழுவின் தலைவர் நாதன் கூறுகையில் ‘‘தற்போது முல்லைப்பெரியாறு அணையில் 138.80 அடி நீர் உள்ளது. அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம். மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதி பெற்று 152 அடியாகவும் உயர்த்தலாம்.
தமிழக அதிகாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் இனிமேல் தடுக்கப்பட மாட்டாது என்று கேரளா உறுதியளித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்போது பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

0 comments