ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி டவுன் பஞ்.,பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ்
ரூ.35 லட்சம் மதிப்பில் தார் ரோடு போடும் பணிகளை தலைவர் மற்றும் அதிகாரிகள்
பார்வையிட்டனர். ஆறுமுகநேரி டவுன் பஞ்., பகுதியில் 1வது வார்டு, 2வது
வார்டுகளான கீழசண்முகபுரம், கீழநவலடிவிளை பகுதியில் நபார்டு பாங்க் கடன்
திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான தார்ரோடு போடும் பணி நடந்து
வருகிறது. இதே போன்று 10வது வார்டு நத்தக்குளம் பகுதியில் ரூ.15 லட்சம்
மதிப்பில் ரோடு போடும் பணிகள் நடக்கிறது. இதனை டவுன் பஞ்.,தலைவர்
கல்யாணசுந்தரம், கவுன்சிலர்கள் லட்சுமணன், முருகானந்தம், இன்ஜினியர்
ரவிச்சந்திரன், இளையராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
0 comments