ஆறுமுகநேரி : ஆறுமுகநேரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
நடந்தது. ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு
விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் ஆறுமுகநேரி சரஸ்வதி நடுநிலைப்பள்ளி,
இந்து துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை அரசு ஆரம்ப
சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார். பேரணி பள்ளியில்
இருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, திசைகாவல்தெரு,
பூவரசூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.இதில் ஆறுமுகநேரி டவுன்
பஞ்.,நிர்வாக அதிகாரி முகம்மது இக்பால் ஷெரிப், சுகாதார ஆய்வாளர்
முத்துக்குமார், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஜெயராணி, செந்தூர்கனி,
சரஸ்வதி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் உதயசங்கர், இந்து துவக்கப்பள்ளி
தலைமையாசிரியை மாரிதங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல்
பற்றிய சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
0 comments