ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » சளி, ஜலதோசம்--இன்றைய பாட்டி வைத்தியம்

ஜலதோசம்: 

1. டீ போடும்போது இஞ்சியைத் தூளாக்கி போட்டுக் கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் சரியாகும். 
2. துளசிச்சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும். 

மூக்கடைப்பு: 

ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 

சளி: 

1. ஓமவள்ளி, வெற்றிலி, துளசி, இஞ்சி இவற்றின் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் மார்பில் கட்டி இருக்கும் சளி பிரிந்து வெளிவரும். 
2. பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி அப்படியேவோ அல்லது பால் சர்க்கரை கலந்தோ குடித்தால் சளித்தொல்லை நீங்கும். 
3. வெந்தயக் கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் சளி சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். இரும்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளது. 

நெஞ்சு சளி:-

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 

வறட்டு இருமலுக்கு: கற்பூரவல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு அருந்திவரப் பலன் உண்டாகும். மேலும் காசநோய், வாதக் கடுப்பு போன்ற நோய்களுக்கும் இதன் சாறு மிகவும் நல்லதாகும். 

கக்குவான் இருமல் 

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

0 comments

Leave a Reply