ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பவனி

மணவாளக்குறிச்சி : மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயில் காவடி பவனி புறப்பட்டு சென்றது.
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலில் இருந்த திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வைகாசி வசாகத்தை முன்னிட்டு 5 பறக்கும் காவடிகளும், வேல்காவடியும் பவனியாக புறப்பட்டுச் சென்றன. முதல்நாள் மாலை 6.30 மணிக்கு வேல் தரித்தலும், இரவு 9 மணிக்கு காவடி பெரும்பூஜையும், 11 மணிக்கு காவடி அலங்காரமும், அடுத்த நாள் காலை 7 மணிக்கு பம்மத்துமூலை, ஆற்றின்கரை,பாபுஜி தெரு, ஆண்டார்விளை, தட்டான்விளை, வடக்கன்பாகம், ஆசாரிமார் தெரு, புதுக்கடைத்தெரு, தருவை அடம்புவிளை வழியாக காவடி பவனியாக சென்று பிற்பகல் 1 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம், நாகர்கோவில் வழியாக செல்லும் காவடி, அடுத்த நாள் (இன்று) காலை திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றடைகிறது.

0 comments

Leave a Reply