ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » தீவிரவாத தடுப்பு ஒத்திகை ஆபரேஷன் ஹம்லா நடைபெறுகிறது


மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் 6 மாதத்திற்கு ஒரு முறை நாடு முழுவதும்கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரேஷன் ஹம்லாஎன்ற பெயரில் கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பெறுகிறது.போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு படை, மாநில உளவுத் துறையினர், கஸ்டம்ஸ், மாநில வருவாய் புலனாய்வு துறை மற்றும் ஓசிஐயூ ஆகிய 10 துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவினர் தீவிரவாதிகள் போன்றும், மற்றொரு பிரிவினர் அவர்களை மடக்கிப் பிடிப்பார்கள்.இந்த ஆண்டிற்கான ஒத்திகை இன்று அதிகாலை துவங்கியது. இது தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a Reply