ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » கூடங்குளத்தில் மின்சாரம், குடிநீர் வினியோகம் ரத்து .மக்கள் அவதி..



கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் இடிந்தகரை பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் போராட்டக்காரர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் போராட்டக்குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், ஜேசு ராஜன், உதயகுமார் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரும் இடிந்தகரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், அங்கு சென்று கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால், போலீசார் இதனை தவிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த நான்கு பேரையும் போலீசார் சரணடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு போராட்டக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடிந்தகரை பகுதியில் அமைந்துள்ள ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் கடல் மார்க்கமாக இடிந்தகரை நோக்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போராட்டக் குழுவைச்சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் சிறைக்குள் உண்ணாவிரதப்போராடடத்தை தொடங்கியிருக்கிறார்கள என செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments

Leave a Reply