அனுமதி இல்லாத குடிநீர் இணைப்பு ஆறுமுகனேரியில் கண்டு பிடிப்பு
ஆறுமுகனேரியில் நகர பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பல இருந்தது குறித்த புகாரின் அடிப்படையில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி உமர்,ஆத்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி,குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் பல வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
குடிநீர் வரும் சமயம் மின்சாரம் தடைபட்டால், குடிநீர் நன்றாக வருகிறது. ஆனால் மின்சாரம் இருக்கும்போது குடிநீர் வந்தால், குடிநீர் சரியாக வருவதில்லை.இதனால் பலர்,அதிகார சக்திகள், கரை வேட்டிகள்,பல்வேறு சங்கப் பொறுப்பாளர்; பிரமுகர் என்ற போர்வையில் பலர் குடிநீரைச் சுருட்டுகின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இதையும் பஞ்சாயத்து கண்டு கொள்ள வேண்டும்.
0 comments