ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி இன்னும் வளர்ச்சி அடையவில்லை

ஆறுமுகனேரியின் மக்கள் தொகை வளர்ச்சி,குடியிருப்புகளின் என்ணிக்கைஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால் கல்வி தரும் நிறுவனத்தின் எண்ணிக்கை கூடவில்லை.எத்தனையோ கோடீசுவரர்களிருப்பினும் ஒரு கல்லூரியைகூடக் கட்ட முன் வரவில்லை.சென்னையிலே தங்களுடைய சிறப்பும் பெருமையும் இருக்கட்டும் என நினைக்கின்றனர்.மக்கள் தொகைக்கேற்ப அரசுமருத்துவமனையின் தரம் உயர்த்தப் படவில்லை. கேட்பாரில்லை.கேட்டாலும் பயனில்லை.உள்ளூர் மருத்துவரானாலும் தங்களுடைய மேம்பாட்டைத்தான் பார்க்கிறார்கள் .ஏழை மக்களுடைய பிரசவம் அரசு மருத்துவமனையில் டாக்டர் படித்தவர்களால் பார்க்கப் படவில்லை.செவிலியர்களால் பார்க்கப்படுகிறது.ஏழைப் பெண்கள் வெறுப்புடன் பார்க்கப்படுகின்றனர். பெரியவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று அற்பர்களால் சுரண்டப்படுகிறது.ஒரு காலத்தில் தமிழகத்திற்கு அரசியல் சொல்லிக்கொடுத்த ஊர் இன்று தூங்கிக் கொண்டிருக்கிறது.இந்நிலை மாறவேண்டும்.

0 comments

Leave a Reply