ஆறுமுகனேரி பாரதி நகரில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மளிகை கடை முன்புறம் எரிந்து சேதமாகின.
ஆறுமுகனேரி பேயன்விளையைச் சேர்ந்தவர் குழந்தைவேல் நாடார்.இவர் மகன் ரமேஷ்(35).இவர் பாரதி நகர் கீழத்தெருவில் மளிகைக் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென தீப் பிடித்தது.இதில் முன்புற பந்தல்,காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வைக்கும் ராக்கைகள் எரிந்து சேதமாகின.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வைகுண்டம் நேரில் வந்து பார்வையிட்டார்.
ஆறுமுகனேரி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தி.செந்தமிழ் செல்வன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட வியாபாரியிடம் ஆறுதல் கூறினார்.

0 comments