காயல்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் 18வது ஆண்டு இந்து எழுச்சி திருவிழா 3 தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.
இதனையொட்டி காயல்பட்டினம் ஸ்ரீகணபதீஸ்வரர் ஆலயத்தில் முதல் தினமான விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 9 அடி ஸ்ரீவெற்றி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலையில் 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இரண்டு மற்றும் மூன்றாம் நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.மூன்றாம் நாள் மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் வெற்றி விநாயகர் விஜர்சனத்திற்கு புறப்பட்டார்.
ஊர்வலத்தை பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.என்.ராஜ கண்ணன் துவக்கி வைத்தார்.ஊர்வலம் ரத்னாபுரி வந்து ஆறுமுகனேரியிலிருந்த விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் சென்று சனிக்கிழமை இரவு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் இந்து முன்னணியினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0 comments